உடற்பயிற்சி செய்யபவர்கள் கவனத்திற்கு! என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்! ஃபுல் லிஸ்ட் இதோ!
உடற்பயிற்சி என்பது உடலின் எடையை குறைக்கவும் வலிமையை அதிகரிக்கவும் செய்யப்படும் ஒரு உடலியல் செயல்முறையாகும். இதனை தினந்தோறும் கடைபிடிப்பது சிறப்பான பலன்களைத் தரக்கூடியாதாகும்.

தினம் தோறும் உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் ஒரு சிலர் சோம்பேறித் தன்மை அதிகமாக இருப்பதால் இந்த உடற்பயிற்சி செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். மருத்துவர்களும் தினம் தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி செய்பவர்கள் உணவிலும் கவனமாக இருக்க வேண்டும்.
உடற்தகுதிக்காக உடற்பயிற்சி செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தசை வலிமை மற்றும் ஆற்றல் நிலைகளை பராமரிக்க போதுமான உணவை சாப்பிட வேண்டும். உடற்தகுதிக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு உணவும் முக்கியம். குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பின் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்து 30 நிமிடங்களுக்குள் 15 கிராம் புரதம் மற்றும் 30 கிராம் கார்போஹைட்ரேட் கொண்ட உணவை உண்பது ஆற்றல், தசை செயல்பாடு மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை பராமரிக்க உதவும். மூன்று வேளை வழக்கமான உணவும், இரண்டு வேளை இணை உணவும் சரியானநேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பின்வருமாறு
முழு தானியங்கள்: சிக்கலான மாவுச்சத்துக்கள் கொண்ட உணவுகள் விரைவாக ஆற்றலை வழங்குவதை விட நீண்ட காலத்திற்கு ஆற்றலைத் தக்கவைக்கும். உடைத்த கோதுமை, ஓட்ஸ், அவல் போன்றவை சிறந்த தேர்வாகும்.