Pressure Cooker: குக்கரில் இந்த பொருட்களை சமைக்க வேண்டாம்! என்னென்னத் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pressure Cooker: குக்கரில் இந்த பொருட்களை சமைக்க வேண்டாம்! என்னென்னத் தெரியுமா?

Pressure Cooker: குக்கரில் இந்த பொருட்களை சமைக்க வேண்டாம்! என்னென்னத் தெரியுமா?

Suguna Devi P HT Tamil
Jan 20, 2025 09:13 AM IST

Pressure Cooker:அன்றாட உணவு தயாரிக்கும் போது இன்றியமையாமல் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் குக்கர். குக்கரில் சமைத்தால் உடனடியாக வேக வைய்க்க முடியும். மேலும் அவசர சமயத்தில் குக்கரில் சமைப்பது எளிதான காரியமாகும்.

Pressure Cooker: குக்கரில் இந்த பொருட்களை சமைக்க வேண்டாம்! என்னென்னத் தெரியுமா?
Pressure Cooker: குக்கரில் இந்த பொருட்களை சமைக்க வேண்டாம்! என்னென்னத் தெரியுமா?

இருப்பினும், பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவு பொருட்கள் உள்ளன. குக்கரில் சமைப்பது அதன் நன்மையை குறைப்பது மட்டுமல்லாமல், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது.

பால் பொருட்கள்

பிரஷர் குக்கரில் பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி சமைப்பது அவற்றின் தரம் மற்றும் சுவையை இழக்கச் செய்யும். மேலும் குக்கரில் பாலை கொதிக்க வைப்பதால் பால் கெட்டியாகிவிடும்.

பருப்பு வகைகள்

பிரஷர் குக்கரில் பருப்புகளை சமைப்பது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கிறது. முடிந்தவரை சாதாரணமாக ஒரு பாத்திரத்தில் வைத்து சமைக்க முயற்சிக்கவும்.

அரிசி

உடனடி சாதத்திற்கு அரிசி சமைக்க பலர் பிரஷர் குக்கர்களை நம்பியுள்ளனர். ஆனால் இந்த வகையான சமையல் மாவுச்சத்திலிருந்து தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இரசாயனங்கள் உடைந்துவிடும் ஆபத்து உண்டாக்க வாய்ப்புள்ளது.

மீன்

மீன்களை குக்கரில் சமைக்கவே கூடாது. இது இறைச்சி உலர்ந்ததாகவும் கடினமாகவும் மாறும். மேலும் குக்கரில் அதிக வெப்பநிலையில் மீன்களை சமைப்பதால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு நச்சுப் பொருட்களாக மாறும்.

சமைக்கும் முறை 

பிரஷர் குக்கரைப் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் சில உள்ளன. பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும் போது தண்ணீர் அதிகரிக்கவோ குறைக்கவோ கூடாது. ஒரு பிரஷர் குக்கர் அழுத்தத்தை உருவாக்கவும் உணவை சமைக்கவும் நீராவியை நம்பியுள்ளது. எனவே தேவையான அளவு தண்ணீர், எண்ணெய் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

நீராவியை உருவாக்க குக்கரில் போதுமான இடம் இருக்க வேண்டும். எனவே குக்கரை முக்கால் பங்கு மட்டும் நிரப்பவும்.   சமைக்கப்படும் உணவு வகையைப் பொறுத்து சமைக்கும் நேரம் மற்றும் அழுத்தம் மாறுபடலாம். எனவே ஒவ்வொரு உணவுக்கும் பொருத்தமான சமையல் நேரம் மற்றும் அழுத்தம் அமைப்பை அறிய கையேட்டைப் பயன்படுத்தவும். சமைத்த பிறகு, எரிவதைத் தவிர்க்க பிரஷர் குக்கரில் இருந்து அழுத்தத்தை கவனமாக எடுத்து விடுங்கள். குக்கரின் பாதுகாப்பு வால்வை சரியான நேரத்தில் மாற்றவும் இல்லையெனில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.