Male Infertility: ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு, மருத்துவக் குறிப்புகள்!-lifestyle changes and diet and medical tips to fix male infertility - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Male Infertility: ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு, மருத்துவக் குறிப்புகள்!

Male Infertility: ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு, மருத்துவக் குறிப்புகள்!

Marimuthu M HT Tamil
Aug 28, 2024 04:47 PM IST

Male Infertility: ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு, மருத்துவக் குறிப்புகள் பற்றி அறிந்துகொள்வோம்.

Male Infertility: ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு, மருத்துவக் குறிப்புகள்!
Male Infertility: ஆண்களின் மலட்டுத்தன்மையை சரிசெய்ய உதவும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு, மருத்துவக் குறிப்புகள்! (Image by Freepik)

கருத்தரிப்பை அடைய விரும்பும் தம்பதிகளுக்கு, இந்த வயது தொடர்பான காரணிகளைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

இதுதொடர்பாக கருவுறுதல் துறை வல்லுநர் மருத்துவர் பருல் அகர்வால், ஆண்கள் கருவுற முடியாமல் போகும் காரணங்கள் மற்றும் அதனை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது குறித்து சில உதவிக்குறிப்புகளை இந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்துக்காக பரிந்துரைத்தார்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்:

  1. ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்: அதிக எடை அல்லது எடை குறைவாக இருப்பது ஹார்மோன் உற்பத்தி மற்றும் விந்தணு ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை நோக்கமாகக் கொள்ளுங்கள்.
  2. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்: மிதமான உடல் செயல்பாடு ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்கவும். இது டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கும்.
  3. புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்: புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது இரண்டும் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தைக் குறைக்கும். புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது கருவுறுதலை மேம்படுத்தும்.
  4. மன அழுத்தத்தைக் குறைக்கவும்: அதிக மன அழுத்த நிலைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்யத் தேவையான ஹார்மோன்களில் தலையிடக்கூடும். யோகா, தியானம், ஆலோசனை போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள்.
  5. வெப்ப வெளிப்பாட்டைத் தவிர்க்கவும்: அதிகப்படியான வெப்பம் விந்தணு உற்பத்தியைப் பாதிக்கும். வெப்பநிலையை அதிகரிக்கும் சூடான நீரில் குளிப்பது, நீராவி குளியல் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதைத் தவிக்கவும்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து:

சமச்சீர் உணவுமுறை: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை உண்பதை உறுதிப்படுத்தவும். துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது விந்தணு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.

  1. நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த உணவுகள்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள உணவுகள் விந்தணுக்களை பல்வேறு அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவும். பெர்ரி, கொட்டைகள் மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுகளைச் சேர்க்கவும்.
  2. நீரேற்றமாக இருங்கள்: இனப்பெருக்க ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சரியான நீர் குடிப்பது அவசியம்.

மருத்துவப் பரிசோதனைகள்:

  1. ஒரு நிபுணரை அணுகவும்: ஒரு கருவுறுதல் நிபுணர் கருவுறாமைக்கான காரணத்தைக் கண்டறிய உதவலாம் மற்றும் பொருத்தமான சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்.
  2. மருந்துகள்: சில மருந்துகள் விந்தணு உற்பத்தி மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் ஹார்மோன் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படலாம்.

கண்காணிப்பு மற்றும் சோதனை:

  1. வழக்கமான பரிசோதனைகள்: வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவும். சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவும்.
  2. விந்து பகுப்பாய்வு சோதனை: வழக்கமான விந்து பகுப்பாய்வு சோதனை என்பது காலப்போக்கில் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் உருவவியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க உதவும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.