Lice Repellent : பேன், பொடுகு தொல்லையா? கெமிக்கல் வேண்டாம்! இயற்கை நிவாரணியாக கூறப்படும் வேப்பிலை! என்ன செய்வது?
Lice Repellent : பேன், பொடுகு தொல்லையா? வேப்பிலையை வைத்து என்ன செய்யவேண்டும்?

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
சிலர் பேன், ஈறுகள் மற்றும் பொடுகுத்தொல்லையால் கடும் அவதிப்படுவார்கள். அதற்காக பல கெமிக்கல் கலந்த ஷாம்பூ மற்றும் பல்வேறு பொருட்களை பயன்படுத்த அவற்றை விரட்ட நினைப்பார்கள். ஆனால் அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் அவர்கள் அவதியுற்று இருப்பார்கள். ஆனால் தலையில் உள்ள பேன், ஈறு மற்றும் பொடுகுகளை நீக்கி இயற்கை நிவாரணியாகவும், கூந்தலுக்கு இயற்கை அழகும் கொடுக்கிறது வேப்பிலை. அதை வைத்து என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி (கொழுந்தாக எடுத்துக்கொள்ளவேண்டும்)
வேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் – 8 பல்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 4 பல்
மிளகு – 10
செய்முறை
வேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், பூண்டு, மிளகு என அனைத்தையும் அரைத்துக்கொள்ளவேண்டும். உரலில் சேர்த்து அரைக்கக்கூடாது, மிக்ஸியில் அரைக்கும்போதுதான் நன்றாக அரைந்து வரும்.
ஒரு இரும்புக்கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். அந்த விழுதின் பசுமை நிறம் மாறி, எண்ணெய் பிரிந்து வரவேண்டும். இந்தப்பொருட்களின் சாறு அனைத்தும் அதில் இறங்கியிருக்கும். நன்றாக ஆறியபின் அதை வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பயன்படுத்தும் முறை
வாரத்தில் ஒரு நாள் இதை எடுத்து தலையில் தடவிக்கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறவிட்டு குளிக்கவேண்டும்.
இந்த அளவு நீங்கள் தயாரித்து வைத்துக்கொண்டால் அது ஒரு மாதம் வரை வரும். ஒரு மாதம் வரையும் கெட்டுப்போகாது. அதை நீங்கள் ஃபிரிஜில் கூட வைத்து பயன்படுத்தலாம். ஒரு மாதம் குளித்தபின்னர் நீங்கள் நன்றாக வித்யாசத்தை உணர முடியும். எனவே கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்