Madurai Bun Parotta: ஆசையைத் தூண்டும் மதுரை பன் பரோட்டா - இதை வீட்டிலேயே செய்யலாம்!
சுவையான மதுரை பன் பரோட்டா செய்முறை குறித்து இங்கே காண்போம்.
மதுரை பன் பரோட்டா
உணவு, உடை, இருப்பிடம் இது மூன்றும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இருப்பிடம் மற்றும் உடை இவை இரண்டும் கூட இல்லாமல் ஒரு மனிதனால் உயிர் வாழ முடியும் ஆனால் உணவு இல்லாமல் எந்த உயிரும் உயிர் வாழ முடியாது. உணவு என்றாலே மனிதர்களுக்கு அலாதியான இன்பம் தான். அதிலும் தனக்குப் பிடித்த உணவு என்றால் சொல்லவே தேவையில்லை.
பலருக்கும் பிரியமான உணவுகளில் ஒன்றாக இருப்பது பரோட்டா. அதிலும் மிகவும் பிரபலமாக இருக்கக்கூடியது மதுரை பன் பரோட்டா. பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் பரோட்டாவுக்கு எப்போதும் முதலிடம் தான். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மதுரை பன் பரோட்டாவை நமது வீட்டிலேயே செய்து சாப்பிட முடியும். அதன் செய்முறை குறித்து இங்கே காண்போம்.
பன் பரோட்டா செய்முறை
தேவையான பொருட்கள்
- இரண்டு கப் மைதா
- ஒரு கப் சர்க்கரை
- ஒரு முட்டை
- ஒரு மேசைக்கரண்டி பால்
- தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய்
செய்முறை
- ஒரு கிண்ணத்தில் மைதாவைக் கொட்ட வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, சர்க்கரை, உடைத்து வைத்திருக்கக்கூடிய முட்டை உள்ளிட்டவற்றைச் சேர்த்துப் பிசைய வேண்டும். அதே சமயம் பாலையும் அதில் கலந்து நன்கு பிசைய வேண்டும்.
- நன்கு பிசைந்த மாவை எண்ணெய்யைத் தடவி இரண்டு மணி நேரம் அதனை மூடி வைக்க வேண்டும்.
- மூடி வைத்திருக்கக்கூடிய மாவை இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெய்யைத் தடவ வேண்டும். பின்னர் அதனை ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
- பின்னர் எண்ணெய்த் தடவிய அந்த மாவைச் சப்பாத்தி கட்டையால் மெல்லியதாகத் தேய்த்து உருட்ட வேண்டும்.
- தீர்த்து வைக்கப்பட்ட அந்த மாவை விரல்களால் சுழற்றி வைக்க வேண்டும். பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக வைக்க வேண்டும்.
- தேய்த்து வைத்திருக்கும் மாவை அந்த எண்ணெய்யில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை இரு புறமும் மாற்றிப் போட்டு வேக வைக்க வேண்டும்.
- அவ்வளவுதான் முறுமுறுப்பான மதுரை பன் பரோட்டா தயார். இதற்கு இணையான ஜோடி சிக்கன், மட்டன் குருமா இருந்தால் போதும், சொல்லவே தேவையில்லை அற்புதமாக இருக்கும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.