‘உனக்கென எழுது ஒரு வரலாறு’ தோல்விகளில் இருந்து குழந்தைகள் கற்கவேண்டிய பாடங்கள்!
‘உனக்கென எழுது ஒரு வரலாறு’ தோல்விகளில் இருந்து குழந்தைகள் கற்கவேண்டிய பாடங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகள் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடங்கள் என்ன தெரியுமா? தோற்றால் துவண்டுவிடவேண்டுமா? தோற்றால் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது ஏன் என்று தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள். தோல்வி நமக்கு எண்ணற்ற பாடங்களைக் கற்பிக்கிறது. உங்களை பலமானவராகவும், அறிவுள்ளவராகவும் மாற்றுகிறது. உங்களை சவால்களை எதிர்கொள்ளச் செய்கிறது. நீங்கள் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு பல நல் வழிகளை கட்டும். தோல்விதான் வெற்றியின் முதல் படி என்பதை மறந்து விடாதீர்கள். தோற்றல்தான் வாழ்க்கையில் நீங்கள் பல நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். எனவே தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் எதிர்த்து போராடி வெற்றி பெறுங்கள். தோல்வியில் இருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மீண்டும் வலுவாக எழுவது
தோல்விதான் குழந்தைகளுக்கு மீண்டும் எப்படி சென்று ஜெயிப்பது அல்லது மீண்டும் தோற்பது அதில் இருந்து பாடம் கற்பது என்பதை கற்றுக்கொடுக்கிறது. தோல்வி நிலையானது கிடையாது. தோற்பது என்பது உண்மையில் தோற்பது அல்ல ஒருமுறை கற்பது. எனவே அவர்களுக்கு தோல்வி என்பது தற்காலிகமானது மற்றும் பின்டைவுகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. ஒவ்வொரு தோல்வியுமே மீண்டும், நீங்கள் உறுதியோடு நீங்கள் மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பாக இருக்கும்.
பிரச்னைகளைத் தீர்ப்பது
குழந்தைகள் தோற்கும்போது, அவர்கள் மற்ற வழிகளில் எவ்வாறு பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வழியில் தீர்வு கிடைக்காதபோது, மற்றொரு வழியில் தீர்வைத் தேடுகிறார்கள். தோல்விதான், கிரியேட்டிவான சிந்தனைகளுக்கு வித்திடுகிறது. அது உங்கள் குழந்தைகள் பிரச்னைகளை வெகு எளிதாக தீர்க்க உதவுகிறது. இதனால் அவர்களின் பிரச்னைகளை பல வழிகளில் தீர்க்கப்படுகிறது.