Dragon Chicken: வாசனையே பசியைத் தூண்டும் - வீட்டிலேயே ஈஸியா டிராகன் சிக்கன் செய்யலாம்!
வீட்டிலேயே எளிமையாக டிராகன் சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உணவு என்பது உயிரினங்களுக்கு அடிப்படைத் தேவையாகும். மனிதர்கள் உணவு இரண்டு வகையாகச் சாப்பிட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் சைவ விரும்பிகள். மற்றொரு தரப்பினர் அசைவ விரும்பிகள்.
பொதுவாக அசைவ விரும்பிகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று தான் கோழிக்கறி. விதவிதமான முறையில் சிக்கனை மிகவும் ருசித்துச் சாப்பிடக் கூடியவர்கள் இங்கு ஏராளம்.
சில உணவுப் பொருட்களை வீட்டில் செய்வது கஷ்டம் என்று நினைத்துக் கொண்டு வெளியில் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் டிராகன் சிக்கன். இந்த டிராகன் சிக்கன் பலருக்கும் மிகவும் பிடித்த ரெசிபிகளில் ஒன்றாகும். ஆனால் இதெல்லாம் வீட்டில் செய்ய முடியாது என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிராகன் சிக்கன் வீட்டில் எளிமையாகச் செய்து நம்மால் சாப்பிட முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. வாருங்கள் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கிலோ எலும்பில்லாத சிக்கன்
- ஒரு துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
- ஒன்றரை டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
- இரண்டு டீஸ்பூன் தக்காளி சாஸ்
- ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
- அரை டீஸ்பூன் சர்க்கரை
- ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி
- ஒரு வெங்காயம்
- சிறிதளவு வெங்காயத்தாள்
- தேவையான அளவு எண்ணெய்
ஊற வைக்க தேவையான பொருட்கள்
- இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- ஒன்றரை டீஸ்பூன் மிளகுத்தூள்
- ஒரு முட்டை வெள்ளை கரு மட்டும்
- இரண்டு டேபிள் ஸ்பூன் சோள மாவு
செய்முறை
- வெங்காயத்தாள், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி உள்ளிட்டவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- சிக்கனை சற்று நீளமாக வெட்டி நன்கு சுத்தமாகக் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு ஊற வைப்பதற்குத் தேவையான பொருட்களை நன்றாக அதோடு பிசைந்து தனியாக வைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு ஊறவைத்த சிக்கனை அதில் பொறித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய வைக்க வேண்டும். மேலும் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி சில்லி சாஸ் சேர்த்துக் கிளற வேண்டும். பின்னர் தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து அந்த கலவையை நன்கு கொதிக்க விட வேண்டும்.
- அந்தக் கலவையானது குதித்துக் கொண்டிருக்கும் பொழுது தீயை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மூடி வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் அருமையான டிராகன் சிக்கன் தயாராகிவிடும்.
- பின்னர் அதன் மேல் நறுக்கி வைத்திருக்கக்கூடிய கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தாள் உள்ளிட்டவற்றை மேலே தூவி விட வேண்டும்.
- பின்னர் அனைவரும் டிராகன் சிக்கனை ருசித்து உண்ணலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்