தலைமைப் பண்பு : ‘தம்பி வா… தலைமை ஏற்க வா…’ ஆளுமைத்திறனை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்? இதோ வழி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தலைமைப் பண்பு : ‘தம்பி வா… தலைமை ஏற்க வா…’ ஆளுமைத்திறனை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்? இதோ வழி!

தலைமைப் பண்பு : ‘தம்பி வா… தலைமை ஏற்க வா…’ ஆளுமைத்திறனை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்? இதோ வழி!

Priyadarshini R HT Tamil
Published Mar 10, 2025 04:01 PM IST

உங்களிடம் இந்த தலைமைப்பண்புகள் இருந்தால் நீங்கள் ஒரு நல்ல ஆளுமை மட்டுமின்றி தலைவராக இருக்கும் வாய்ப்பும் உங்களிடம் உள்ளது.

தலைமைப் பண்பு : ‘தம்பி வா… தலைமை ஏற்க வா…’ ஆளுத்திறனை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்? இதோ வழி!
தலைமைப் பண்பு : ‘தம்பி வா… தலைமை ஏற்க வா…’ ஆளுத்திறனை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்? இதோ வழி!

புதிய யோசனைகள் மற்றும் ஆய்வுகள்

சிறந்த தலைவர்கள் எப்போதும் புதிய ஐடியாக்கள் மற்றும் ஏற்கும் திறன் மற்றும் நெகிழ்த்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் இதை யார் செய்தாலும் அவர்களை ஊக்குவிப்பார்கள். அவர்கள் பல்வேறு கோணங்களை வரவேற்பார்கள். குழுவுடன் இணைந்து பணிபுரிவது மற்றும் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது என அனைத்துக்கும் அவரிடம் யோசனைகள் கேட்க முடியும். அவர் வெளிப்படையாக இருப்பதாலேயே பணியில் கிரியேட்டிவிட்டி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் நிரம்பி வழியும்.

பணி குறித்த பேஷன்

நல்ல தலைவர்கள் எப்போதும் அவர்கள் பணி மீது பற்று கொண்டிருப்பார்கள். அவர்களின் குழுவை உற்சாகத்துடன் கவர்ந்து ஈர்ப்பார்கள். ஊக்கத்துடன் செயல்படுவார்கள். இந்த பற்று அவர்களுக்கு அவர்களின் பணியில் மகிழ்ந்திருக்க உதவும். அவர்களின் தனிப்பட்ட தேர்வு மற்றும் வேலை இரண்டும் மாறியிருந்தாலும், அவர்களை இந்த பற்று பணியில் சிறக்கச் செய்யும். இது அவர்களின் திறனை அதிகரிக்கும் மற்றும் வேலையில் திருப்தியை ஏற்படுத்தும்.

புகழ்

பெருந்தலைவர்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்கவேண்டும் என்று எண்ண மாட்டார்கள். அவர்கள் கடுமையான முடிவுகளை எளிதாக எடுப்பார்கள். அவர்கள் அறமற்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அவர்களின் புகழைவிட நிறுவனம் மற்றும் குழுவின் வளர்ச்சியைத் தான் மனதில் வைத்திருப்பார்கள். இந்த தைரியம்தான் அவர்களின் குழுவில் அவர்களுக்கான மரியாதையைப் பெற்றுத்தரும்.

உதாரணம்

நல்ல தலைவர்கள் உதாரணமாக வாழ்வார்கள். அவர்களின் நடத்தைகள் எப்போது அவரது குழுவினரிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ அதுவாகவே இருக்கும். அவர்கள் அர்பணிப்புடனும், மரியாதையுடனும் இருப்பார்கள். மற்றவர்களையும் இவற்றை செய்ய ஊக்குவிப்பார்கள். இந்த மாதிரியான தலைமை குணம், நேர்மையை குழுவில் ஊக்குவிக்கும்.

மற்றவர்களை முன்னிறுத்தி பேசுவார்கள்

நல்ல தலைவர்கள் எப்போதும் குழுவின் வெற்றிக்கு முன்னுரிமை கொடுப்பார். குழுவில் நன்றாக செயல்பட்டவர்களை பாராட்டி, அவர்களும் வளர ஊக்குவிப்பார்கள். இதனால் அவர்கள் மிளர முடியாமல் போனாலும் வருந்தமாட்டார்கள். மற்றவர்களை முன்னிறுத்தி, தலைவர்கள் ஒற்றுமையான மற்றும் ஆதரவான குழுச்சூழலை உருவாக்குவார்கள்.

தவறுகளை ஏற்று அதிலிருந்து கற்பார்

நல்ல தலைவர்கள், அவர்களின் தவறுகளை ஏற்பார்கள். அதற்கு பொறுப்பேற்பார்கள் அதை சரிசெய்ய பணி செய்வார்கள். இது அவர்களின் நேர்மையையும், பொறுப்புணர்வையும் காட்டுகிறது. தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வார்கள். தலைவர்கள் தனிப்பட்ட முறையிலும், பணியிலும் வளர்வார்கள்.

ஃபீட் பேக்

நல்ல தலைவர்கள் நல்ல ஃபீட் பேக்குகளைக் கொடுப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கும் ஃபீட் பேக்குகளையும் ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள். உங்கள் குழுவை நீங்கள் முன்னேற்ற விரும்பினால், நேரடி ஃபீட் பேக்குகளைக் கொடுங்கள். இந்த அணுகுமுறை அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். மேலும் தொடர் வளர்ச்சிக்கும் இது ஊக்குவிக்கும். குழுவின் வளர்ச்சிக்கு உதவும்.

நம்பிக்கை

தனது ஊழியரின் வெற்றிக்கு முன்னுரிமை கொடுக்க அவர்களுக்கு தேவையான விஷயங்களையும், உதவிகளையும் வழங்குவார். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார். அவர்களின் ஊழியர்கள் நன்றாக உழைக்கவும், பணியிடத்தில் சிறப்பதையும் உறுதி செய்வார்கள். இதன் வழியாக அவர் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அவரது ஊழியர்கள் மத்தியில் உருவாக்குவார்.

ஊக்கம்

ஒரு நல்ல தலைவர் தன குழுவுக்கு எப்போது ஊக்கமளித்துக்கொண்டேயிருப்பார். அவர்களுக்கு நேர்மறையான வாழ்த்துக்களையும், ஒருவர் வெற்றி பெற்றால் அவரை புகழ்வதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார். அவர்கள் சோரும்போது, அவர்களை உற்சாகப்படுத்துவார். அவர்கள் குழு தனது சிறப்பான பணியைச் செய்ய ஊக்குவிப்பார். இந்த நேர்மறை எண்ணங்கள் குழுவில் ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்கும். குழுவை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருக்க உதவும்.

தனிப்பட்ட பிணைப்பு

தலைவர் குழுவில் உள்ள அனைவருடனும் தனிப்பட்ட பிணைப்புடன் இருப்பார். தனது ஊழியர்கள் குறித்து அறிந்து வைத்திருப்பார். அவர்களின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து தெரிந்திருப்பார். அவர்களின் தனிப்பட்ட இலக்குகள் மற்றும் சவால்களையும் அறிந்து வைத்திருப்பார். இது அவர்களுடன் தனிப்பட்ட பிணைப்பை ஏற்படுத்தும். இது அவர்களுக்கு குழுவுடன் ஒன்றிணைந்து இருக்கும் உணர்வைத் தரும். இதனால் அவர்களின் குழுவே மகிழ்ச்சியுடன் உற்சாகமாக பணிபுரியும். இந்த அணுகுமுறை குழுவில் ஒரு நல்ல பிணைப்பை அனைவருடனும் ஏற்படுத்தும்.