Leadership Skills : மற்றவர்களிடம் இருந்து சிறப்பான வேலையை பெற வேண்டுமா? அதற்கு மாற்று வழி எத்தனை உதவும் பாருங்கள்!
Leadership Skills : மற்றவர்களிடம் இருந்து சிறப்பான வேலையை பெற வேண்டுமா? அதற்கு மாற்று வழி எத்தனை உதவும் பாருங்கள். இதோ தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

மற்றவர்களின் நன்மதிப்பைபெற வேண்டுமெனில், இந்த மாற்ற மனநிலை அதற்கு எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.
மற்றர்களின் நன்மதிப்பை பெற உதவும் வழிகள்
நீங்கள் உளவியலைப் பயன்படுத்தி மற்றவர்கள் உங்களை திரும்பி பார்க்க செய்யமுடியும். அது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமும் ஆகும். அதை நீங்கள் சரியாக பயன்படுத்தவேண்டும். இது மற்றவர்களை பாதிக்கிறது, அவர்களை நீங்கள் எதிர்பார்த்த அளவு உங்கள் பக்கம் திருப்புகிறது. அவர்களே இதை உணரமாட்டார்கள். இது உங்களின் ஆர்வத்தை தூண்டினால், நீங்கள் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
எதிர்வினையாற்றுங்கள்
நீங்கள் ஒருவர் ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் செய்யமாட்டார்கள் என எதிர்மறையாகக் கூறுங்கள். இது அவர்களுக்கு நீங்கள் நினைத்தது தவறு என்று நிரூபிக்கச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தும். அதனால் உங்கள் பணியும் சிறக்கும். அவர்களுக்கும் அது நன்மை பயக்கும்.
சவாலாக்குங்கள்
உங்களின் தேவையை சவாலாக மாற்றுங்கள். அதற்காக அவர்களிடம் இப்படி கூறுங்கள், ‘நீங்கள் சரியான நேரத்தில் அதை முடிப்பீர்கள் என நான் நினைக்கவில்லை’ இது அவர்களை ஊக்கப்படுத்தி, அந்த செயலை முடிக்க வைத்து நீங்கள் நினைத்தது தவறு என்று நிரூபிக்கவே அவர்கள் இதைச் செய்வார்கள்.
ஆர்வமில்லாததுபோது இருங்கள்
உங்களுக்கு உண்மையில் என்ன தேவையோ, அதில் ஆர்வம் இல்லாததுபோல் காட்டிக்கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு அதிக ஆர்வத்தை தூண்டி, அவர்களை அந்த வேலையை முடிக்கச் செய்துவிடும்.
குறைவான எதிர்பார்ப்புகள்
நீங்கள் ஒருவரிடம் இருந்து குறைந்தளவே எதிர்பார்க்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குங்கள். இது அவர்களுக்கு ஊக்கமளிதுத, அந்த எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாக அவர்களை செய்யத்தூண்டும். அவர்கள் நினைத்தது தவறென்று அவர்களை உணரவைக்கும்.
முடிவிலும் வித்யாசம் காட்டுங்கள்
ஒரு முடிவு அல்லது செயலின் விளைவு என்னவாக இருக்கும் என்பது குறித்து நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்பதில் நீங்கள் தெளிவாக இருங்கள். இது உங்களை ஊக்கப்படுத்தி, நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை உங்களுக்கு கிடைக்கச் செய்யும். இதை செய்பவர்களிடம் இது கட்டாயம் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.
நீங்கள் அவர்களுக்கு தேர்தெடுக்க வாய்ப்பு கொடுத்துள்ளதுபோல் நடியுங்கள்
இரண்டு தேர்வுகளுக்கு மத்தியில் நீங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதுபோல் பாசாங்கு செய்யுங்கள். இதனால் அவர்கள் நீங்கள் விரும்பும் ஒன்றை கட்டாயம் செய்துவிடுகிறார்கள. இது அவர்களை மிகவும் கட்டுப்பாடுடன் நடக்கவும் செய்கிறது. மேலும் நீங்கள் விரும்பும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும் வைக்கிறது.
ஈகோவைத் தூண்டிவிடுங்கள்
நீங்கள் வேறு ஒரு நபர் இந்த வேலைக்கு சிறந்தவராக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், அவர்களை அதிகப்படுத்தியும், இவர்களை மட்டப்படுத்தியும் கூறுங்கள். இது அவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் சொந்த திறன்கள் மற்றும் மதிப்பை அவர்களுக்கு உணர்த்தும் ஒன்றாக இருக்கும்.
எளிய வழி
ஒரு பிரச்னைக்கு எளிமையான மற்றும் சிறப்பான தீர்வை எட்ட முயற்சி செய்யுங்கள். இது அவர்களுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுக்கும். மிகுந்த சவாலான ஒன்றை தேர்ந்தெடுத்து, அதற்கு சிறப்பான தீர்வை எட்டி, அவர்களால் இதை நிரூபிக்க முடியும் என்று காட்டுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்