தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Laziness Is Getting Out Of Bed A Big Challenge For You In The Morning Heres The Cure For Morning Lethargy

Laziness: காலையில் படுக்கையிலிருந்து எழுவது உங்களுக்கு பெரிய சவாலா? அதிகாலை சோம்பலுக்கு மருந்து இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 01, 2024 09:02 AM IST

குளிர்காலத்தில் கடுமையான குளிர் மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை காரணமாக நீங்கள் இந்த வகையான சோம்பலைப் பெறுவீர்கள். படுக்கையில் இருந்து எழுந்து கொள்வதற்கு சோம்பல் உணர்வு தோன்றலாம். இங்குள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் காலை சோம்பலைத் தவிர்க்கலாம்.

காலையில் படுக்கையிலிருந்து எழுவது உங்களுக்கு பெரிய சவாலா? அதிகாலை சோம்பலுக்கு மருந்து இதோ!
காலையில் படுக்கையிலிருந்து எழுவது உங்களுக்கு பெரிய சவாலா? அதிகாலை சோம்பலுக்கு மருந்து இதோ! (pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

குளிர்காலத்தில் கடுமையான குளிர் மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை காரணமாக நீங்கள் இந்த வகையான சோம்பலைப் பெறுவீர்கள். எனவே படுக்கையில் இருந்து எழுந்து கொள்வதற்கு சோம்பல் உணர்வு தோன்றலாம். அப்படிப்பட்ட நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இங்குள்ள குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் காலை சோம்பலைத் தவிர்க்கலாம்.

ஒரு குறிப்பிட்ட தினசரி இலக்கை அமைக்கவும்: இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், நாளை நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்று ஒரு இலக்கை அமைக்கவும். இந்த நேரத்திற்குள் அதை முடிக்க வேண்டிய காலக்கெடுவை நீங்களே தீர்மானித்து கொள்வது நல்லது. 

அது நடைப்பயிற்சியாக இருக்கலாம் அல்லது சரியான நேரத்தில் அலுவலகம் செல்வதாக இருக்கலாம். எனவே உங்களுக்கான ஒரு இலக்கை நீங்களே மனதில் தேர்ந்தெடுத்து கொண்டு படுக்கைக்குச் செல்லுங்கள். காலையில் சரியான நேரத்தில் படுக்கையில் இருந்து எழுவதற்கு இது உங்களுக்கு நல்ல தூண்டுதலாக இருக்கும். உங்களுக்கு அது ஒரு வித உற்சாகத்தையும் தரும்

பிராணயாமா மற்றும் தியானம் செய்யுங்கள்: உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற, நீங்கள் முதலில் கண்டிப்பாக தினமும் காலையில் தியானம் செய்வது நல்லது. இது உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் அமைதியாக்கி சிந்தனையை கூர்மைப்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் அடுத்த பணிகளை உற்சாகத்துடன் செய்ய உதவுகிறது.

காலை வழக்கத்தை கடைபிடியுங்கள்: நான் காலையில் எழுந்தவுடன் இவற்றைச் செய்ய வேண்டும் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். காலையில் எழுந்து வாக்கிங் செல்வது அல்லது டைரியில் ஏதாவது எழுதுவது, உடற்பயிற்சி செய்வது, உங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசிப்பது, செய்தித்தால் வாசிப்பது, நல்ல இசை கேட்பது இப்படி ஒரு வழக்கத்தை கடைபிடியுங்கள். தினமும் நம் அன்றாட பழக்கமாக மாற்றி விட்டால் மூளை அதிகாலையில் இருந்தே மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விடும். 

காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அதுவே மிகவும் எரிச்சலான மன நிலையை உருவாக்கும். காலையில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைக்கான சிறிய முன் தயாரிப்புகளை செய்து கொண்டால் காலை நேர பதற்றத்தையும் தவிர்க்க முடியும். இதை செய்தால் உங்களின் ஒவ்வொரு நாளும் மனதிற்கு இதமாக ஆரம்பிப்பதை காலப்போக்கில் உங்களால் உணர முடியும்.

நீங்கள் வெற்றி பெறுவதைக் காட்சிப்படுத்துங்கள்: படுக்கையில் இருந்து எழுவது உங்களுக்கு கடினமாக இருந்தால், நீங்கள் கண்ட கனவில் நீங்கள் வெற்றியடைந்ததைக் கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் நிச்சயமாக உற்சாகமாக உணர்வீர்கள். உங்களைச் சுற்றி உங்களுக்கு சாதகமான நிலை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அது நம் இலக்கை அடைய உதவும்

சிறிய படிகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்: பெரிய பணிகளை நினைவில் வைத்துக் கொள்வது, ஒரு நாளை மிகவும் பயமாகத் தொடங்க வைக்கும். எனவே ஆரம்பத்தில் எளிதான மிகவும் ஒரு சிறிய மைல்கல்லை எட்டுவதன் மூலம் நாளைத் தொடங்குவது பற்றி சிந்தியுங்கள். இன்றைய பணிகளை முடிக்க நான் என்ன முயற்சி எடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்து அதன் வழி செயல்படுங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாக படுக்கையில் இருந்து எழுந்து உங்கள் இலக்கை அடைய நினைப்பீர்கள்.

WhatsApp channel