லெவரியா : இலங்கை ஸ்பெஷல் லெவரியா: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் டிரெண்டிங் ஆன ரெசிபி! இதோ செய்முறை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  லெவரியா : இலங்கை ஸ்பெஷல் லெவரியா: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் டிரெண்டிங் ஆன ரெசிபி! இதோ செய்முறை!

லெவரியா : இலங்கை ஸ்பெஷல் லெவரியா: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் டிரெண்டிங் ஆன ரெசிபி! இதோ செய்முறை!

Priyadarshini R HT Tamil
Updated May 25, 2025 02:21 PM IST

லெவரியா : அரை வட்ட வடிவில் மூடி வேகவைத்து எடுத்தால் சூப்பர் சுவையான இலங்கையில் லெவரியா தயாராகிவிடும். இதன் நடுவில் மாம்பழங்கள், ஸ்ட்ராபெரிகள், மாதுளைகளை எனவும் வைத்து நிரப்பிக்கொள்ளலாம். இந்த இலங்கை ஸ்பெஷல் உணவை எப்படி செய்வது என்று பாருங்கள்.

லெவரியா : இலங்கை ஸ்பெஷல் லெவரியா: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் டிரெண்டிங் ஆன ரெசிபி! இதோ செய்முறை!
லெவரியா : இலங்கை ஸ்பெஷல் லெவரியா: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் டிரெண்டிங் ஆன ரெசிபி! இதோ செய்முறை!

புட்டு அல்லது கொழுக்கட்டை மாவில் சூடான தண்ணீரை ஊற்றி பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு உருட்டிக்கொள்ளவேண்டும். இந்த மாவு நல்ல மிருதுவாக இருக்கவேண்டும். இதில் குங்குமப்பூக்களை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். அது ஒரு வெரைட்டியாகும். ஆனால் பாரம்பரியமாக செய்வது வெறும் மாவைக்கொண்டு மட்டும்தான் தயாரிக்கப்படும். இடியாப்ப குழாயில் வைத்து வாழையிலையில் பிழிந்துகொள்ளவேண்டும். அதன் நடுவில் தேங்காய்த் துருவல், வெல்லம், பாசிப்பருப்பு கலவையை சேர்த்து வாழையிலையை மூடிக்கொள்ளவேண்டும். அரை வட்ட வடிவில் மூடி வேகவைத்து எடுத்தால் சூப்பர் சுவையான இலங்கையில் லெவரியா தயாராகிவிடும். இதன் நடுவில் மாம்பழங்கள், ஸ்ட்ராபெரிகள், மாதுளைகளை எனவும் வைத்து நிரப்பிக்கொள்ளலாம். இந்த இலங்கை ஸ்பெஷல் உணவை எப்படி செய்வது என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

• புட்டு அல்லது இடியாப்பம் அல்லது கொழுக்கட்டை மாவு – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• வெல்லம் – அரை கப் (பொடித்த)

• நெய் – 4 ஸ்பூன்

• முந்திரி – 10 (உடைத்தது)

• திராட்சை – 20

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீர் சேர்த்து மாவை நல்ல மிருதுவாக கொழுக்கட்டை மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உருட்டி மூடிவைத்துவிடவேண்டும்.

3. இதில் குங்குமப்பூ சேர்க்கலாம். நீங்கள் விரும்பினால், சூடான தண்ணீரில் குங்குமப்பூவை சிறிது நேரம் நன்றாக ஊறவிட்டு, அந்த தண்ணீரையும் நீங்கள் மாவு பிசையும்போது, சேர்த்துக்கொள்ளவேண்டும். இது முற்றிலும் உங்கள் விருப்பம்தான். இல்லாவிட்டால் கூட விட்டுவிடலாம்.

4. ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அது சூடானவுடன் முந்திரி, திராட்சை சேர்த்து, தேங்காய்த் துருவல் மற்றும் வெல்லம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். வெல்லம் உருகி நன்றாக தேங்காயுடன் கலந்து திரண்டு வரவேண்டும்.

5. ஒரு வாழை இலையை சதுர வடிவமாக வெட்டிக்கொள்ளவேண்டும். இடியாப்பக் குழாயில் மாவை சேர்த்து மெல்லிசாக பிழிய வேண்டும். அடுத்து அதன் மேல் தயாரித்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தை சேர்த்து வாழை இலையை பாதியாக மூடி, இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வைத்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.

6. வெந்த பின்னர் எடுத்தால் சூப்பர் சுவையான லெவரியா தயார்.

இதை காலை உணவாகவோ அல்லது மாலை ஸ்னாக்ஸாகவோ சாப்பிட சுவை அள்ளும். இதில் தேங்காய் பூரணத்துடன், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, ஸ்ட்ராபெரி, மாம்பழம் உள்ளிட்ட பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒரு சிலருக்கும் பிடிக்காது. இது அப்டேடட் வெர்ஷன், பாரம்பரிய முறையில் பழங்கள் சேர்த்துக்கொள்ளப்படாது. இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.