வயிறு வலிக்க சிரிக்கணும்; மனதுக்கு ஆறுதல்; இந்த மொக்க ஜோக்குகளை படித்து மகிழ்ந்திருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வயிறு வலிக்க சிரிக்கணும்; மனதுக்கு ஆறுதல்; இந்த மொக்க ஜோக்குகளை படித்து மகிழ்ந்திருங்கள்!

வயிறு வலிக்க சிரிக்கணும்; மனதுக்கு ஆறுதல்; இந்த மொக்க ஜோக்குகளை படித்து மகிழ்ந்திருங்கள்!

Priyadarshini R HT Tamil
Dec 23, 2024 04:59 PM IST

நீங்கள் வெடித்து சிரித்து மகிழ இந்த ஜோக்குகளைப் படியுங்கள்.

வயிறு வலிக்க சிரிக்கணும்; மனதுக்கு ஆறுதல்; இந்த மொக்க ஜோக்குகளை படித்து மகிழ்ந்திருங்கள்!
வயிறு வலிக்க சிரிக்கணும்; மனதுக்கு ஆறுதல்; இந்த மொக்க ஜோக்குகளை படித்து மகிழ்ந்திருங்கள்!

ஏன்னா, அவரு ‘சீப்’பான டாக்டராம். ஹாஹாஹா!

 

பைல்க்கும், ஃபைல்ஸ்க்கும் என்ன வித்யாசம்?

வேறென்ன, ஃபைல்ஸ் உட்கார்ந்து பாக்கணும், பைல்ஸ்ன்னா பாத்து உக்காரணும். ஹாஹாஹா!

 

ஒருத்தன் காலையில எழுந்து shoe போட்டுக்கிட்டு கிரவுண்ட்ல ஸ்பீடா ஓடினானாம். அவன் கால்ல பாத்தா திடீர்ன்னு ரத்தம் வருதாம்? ஏன்?

ஏன்னா, அவன் போட்டது cut shoeவாம் அதான் கட் பண்ணி விட்ருச்சாம் ஹாஹாஹா!

 

ஒரு டாக்டர்கிட்ட கார், பங்களான்னு சொத்து நிறைய இருக்காம். ஆனால் அவர் ஹாஸ்பிட்டல் போகும்போது மட்டும் நடந்துதான் போவாராம். ஏன்?

ஏன்னா, அவரு கால்நடை டாக்டராம். ஹாஹாஹா!

 

ஒரு மன்னர் போருக்கு போகும்போது eraser எடுத்துக்கிட்டு போராராம். ஏன்?

ஏன்னா, எதிரி நாட்டுப்படைகளை அழிக்க. ஹாஹாஹா!

 

ஒரு பொண்ணு பால எடுத்து தலையில வச்சுகிட்டாளம். ஏன்?

ஏன்னா, அது ரோஸ் மில்க்காம். ஹாஹாஹா!

 

ஒருத்தன் பாடபுத்தகத்த கொதறி வெச்சு இருந்தானாம்? ஏன்?

ஏன்னா, அவன் படிப்புல புலியாம். ஹாஹாஹா!

 

டாக்டர் – கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

பேஷன்ட் – போயும், போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு

தோணுது டாக்டர்!

 

ஒருவர் - எம்பிளாய்மெண்ட் ஆபிசில பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கியே ஏன்?

மற்றொருவர் – என்னோட அப்பாவுக்கு புதுப்பிக்கறணும், தாத்தாவுக்கு முதல் இன்டர்வ்யூ வந்திருக்கு!

 

நண்பர் 1 - வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

நண்பர் 2 – அதனால?

நண்பர் – 1 - வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்.

ஜோக்

ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.

சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்

சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.

எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.