சோ கலகலவென சிரி; கண்ணில் நீர் வர சிரி; நீங்கள் வெடித்து சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சோ கலகலவென சிரி; கண்ணில் நீர் வர சிரி; நீங்கள் வெடித்து சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்!

சோ கலகலவென சிரி; கண்ணில் நீர் வர சிரி; நீங்கள் வெடித்து சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்!

Priyadarshini R HT Tamil
Dec 22, 2024 04:44 PM IST

நீங்கள் வெடித்து சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்.

சோ கலகலவென சிரி; கண்ணில் நீர் வர சிரி; நீங்கள் வெடித்து சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்!
சோ கலகலவென சிரி; கண்ணில் நீர் வர சிரி; நீங்கள் வெடித்து சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்!

ஏன்னா அதுக்கு 1, 2, 3 போடத்தெரியாதாம். அதான் முட்டை போடுதாம். ஹாஹாஹா!

 

ஒருத்தர் அழுகுறாராம். ஆனால் கண்ணில் இருந்து தண்ணீரே வரலயாம் ஏன்?

ஏன்னா, அவங்க ஊர்ல தண்ணி கஷ்டமாம். ஹாஹாஹா!

 

யார் அடிச்சா வலிக்காது?

வேறென்ன? காத்தடிச்சா அல்லது மணியடிச்சா வலிக்காது. ஹாஹாஹா!

 

தண்ணீரில் கரைத்தால் கரையும் திரை எது?

வேற எது மாத்திரைதான். ஹாஹாஹா!

 

டாக்டர்கிட் போன ஒருத்தன் அவர்கிட்ட சீப்பு இருக்கான்னு பாத்தானாம்? ஏன்?

ஏன்னா, அவரு ‘சீப்’பான டாக்டராம். ஹாஹாஹா!

 

பைல்க்கும், ஃபைல்ஸ்க்கும் என்ன வித்யாசம்?

வேறென்ன, ஃபைல்ஸ் உட்கார்ந்து பாக்கணும், பைல்ஸ்ன்னா பாத்து உக்காரணும். ஹாஹாஹா!

 

ஒருத்தன் காலையில எழுந்து shoe போட்டுக்கிட்டு கிரவுண்ட்ல ஸ்பீடா ஓடினானாம். அவன் கால்ல பாத்தா திடீர்ன்னு ரத்தம் வருதாம்? ஏன்?

ஏன்னா, அவன் போட்டது cut shoeவாம் அதான் கட் பண்ணி விட்ருச்சாம் ஹாஹாஹா!

 

ஒரு டாக்டர்கிட்ட கார், பங்களான்னு சொத்து நிறைய இருக்காம். ஆனால் அவர் ஹாஸ்பிட்டல் போகும்போது மட்டும் நடந்துதான் போவாராம். ஏன்?

ஏன்னா, அவரு கால்நடை டாக்டராம். ஹாஹாஹா!

 

ஒரு மன்னர் போருக்கு போகும்போது eraser எடுத்துக்கிட்டு போராராம். ஏன்?

ஏன்னா, எதிரி நாட்டுப்படைகளை அழிக்க. ஹாஹாஹா!

 

ஒரு பொண்ணு பால எடுத்து தலையில வச்சுகிட்டாளம். ஏன்?

ஏன்னா, அது ரோஸ் மில்க்காம். ஹாஹாஹா!

 

ஒருத்தன் பாடபுத்தகத்த கொதறி வெச்சு இருந்தானாம்? ஏன்?

ஏன்னா, அவன் படிப்புல புலியாம். ஹாஹாஹா!

 

சிவப்பு கலர் சட்டை போட்ட ஒருத்தர் பைக்ல வேகமா வந்து அவங்க வீட்டு கதவை தட்டுறாராம்? ஏன்?

ஏன்னா, வீட்ல காலிங் பெல் இல்லையாம். ஹாஹாஹா!

 

டாக்டர் - இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க? மறுபடியும் எதுக்கு வந்தீங்க?

நோயாளி - இப்ப மருந்து கொட்டிடுச்சி டாக்டர்.

 

கணவன் - என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா

நண்பர் – அச்சச்சோ என்ன ஆச்சு?

கணவர் – அவளே சாத்திட்டா

 

நண்பர் - கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

மற்றவர் - முழுகாம இருக்கா!

 

டாக்டர் – கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

பேஷன்ட் – போயும், போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு

தோணுது டாக்டர்!

 

ஒருவர் - எம்பிளாய்மெண்ட் ஆபிசில பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கியே ஏன்?

மற்றொருவர் – என்னோட அப்பாவுக்கு புதுப்பிக்கறணும், தாத்தாவுக்கு முதல் இன்டர்வ்யூ வந்திருக்கு!

 

நண்பர் 1 - வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

நண்பர் 2 – அதனால?

நண்பர் – 1 - வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்.

 

ஒருவர் - தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம். பொண்ணு எப்பிடி?

மற்றொருவர் - நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார். இப்ப எப்படின்னு தெரியல!

 

ஒருவர் - ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

மற்றொருவர் - ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவார்.

கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸில் ஏழையாகிவிடுவார்.

 

போலீஸ் - தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?

திருடன் - சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?

 

ஒருவர் - உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே? அவங்க மேல அவ்வளவு பிரியமா?

மற்றொருவர் - அட நீங்க ஒண்ணு சார், ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!

 

இன்றைய சிந்தனைக்கு

உன் மீது உனக்கே நம்பிக்கையில்லையென்றால், கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.