‘கலகலவென சிரி; கண்ணில் நீர் வர சிரி! இதோ வெடித்து சிரிக்க இத்தனை மொக்க ஜோக்குகள்!
கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்கு இந்த மொக்க ஜோக்குகளை படித்து சிரித்துவிட்டு செல்லுங்கள்.
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்வார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம். இன்று சிந்தனைக்கு அல்ல; வாய் விட்டு சிரிச்சுட்டு மட்டும் போங்க. இதோ மொக்க ஜோக்குகள்.
மொக்க ஜோக்குகள்
அந்த எலி ஐடி பக்கமே போகாது ஏன் தெரியுமா?
ஏன்னா அதுக்கு பொரியல்னா பயம்.
ஒரு பையன் ஒரு நாய் வரைஞ்சு அதுக்கு வாய் வரையாம விட்டான் ஏன்?
ஏன்னா அது வாயில்லா பிராணி.
கடல் அரிப்பு ஏற்பட்டா என்ன செய்யணும்?
அதுக்கு சொரிஞ்சு விடணும்.
ஒருவன் நைட் ஃபுல்லா படிச்சும் பெயிலானா ஏன்?
ஏன்னா அவன் படிச்சது ஃபேஸ் புக்காச்சே!
தண்ணீலேந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க?
அப்படி எடுக்கலன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
வைக்கோல் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, எப்படி?
மாடெல்லாம் கண்ணாடி போட்டு பாத்திருக்கிறீங்களா?
பீட்ரூட்டை பச்சையா சாப்பிட முடியாது ஏன்?
ஏன்னா அது சிவப்பு நிறத்தில்தான உள்ளது.
டேய் என்னோட பாட்டிக்கு 3 காது எப்படி சொல்லு?
தெரியலையே
வலது காது, இடது காது, கேட்காது. சோ 3 காதுல்ல
ஃபோர்ட் என்றால் ஒரு வண்டி
அப்படியெனில் ஆக்ஸ்ஃபோர்ட் என்றால் என்ன?
ஆக்ஸ்ஃபோர்ட் என்றால் மாட்டு வண்டி
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குகள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்