தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
May 18, 2024 05:02 PM IST

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!
Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

நாள் முழுவதும் நாம் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் ஒரே ஒருமுறை தவறான நேரத்தில், தவறாக உணவை எடுத்துக்கொள்வதால் அந்த நாள் முழுவதும் நாம் எடுத்துக்கொண்ட ஆரோக்கிய உணவுகளைக் கெடுக்கிறது.

புரதச்சத்துக்கள் நிறைந்த மற்றும் கார்போஹைட்ரேட்கள் குறைவான உணவை நாம் எடுத்துக்கொள்வது, அன்றாட உடற்பயிற்சி மற்றும் நாம் கலோரி அளவில் எடுத்துக்கொள்ளும் உணவு நமது மொத்த நாளையுமே பாதித்துவிடும்.

நீங்கள் அடிக்கடி இரவில் தாமதமாக உணவு உட்கொள்பவர் என்றால், ஏன் அது ஆபத்து என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இரவில் எப்போது உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

உறங்கச் செல்லும் மூன்று முதல் 4 மணி நேரத்துக்கு முன்னதாக நீங்கள் உணவு உட்கொண்டு முடித்திருக்கவேண்டும். நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறீர்கள், இரவு 12 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை உறங்குகிறீர்கள் என்றால், அது உடல் நலனுக்கு மிகவும் கேடுவிளைவிக்கக்கூடியது. நீங்கள் 9 மணி முதல் 12 மணி வரை தாமதம் என்று பொருள். 

அந்நாளின் இறுதியில், உங்கள் உடல் நீங்கள் சாப்பிடதை வைத்து வளர்சிதையை செய்யும். அப்போது நீங்கள் உங்கள் உடல் உறிஞ்சிய ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அது கொழுப்பாக மாறி உங்கள் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

நள்ளிரவில் உணவு உட்கொள்வதால், உடலில் ரத்த குளுக்கோஸ், இன்சுலின், கொழுப்பு ஆகியவற்றின் அளவு அதிகரிக்கிறது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைதான் உணவு உட்கொள்ளவேண்டும். ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பது உங்கள் குறிக்கோள் எனில், பின்னரவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

இரவு தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

உறக்கத்தில் தடை

பொதுவாக இரவு தாமதமாக சாப்பிடுவது, தாமதமாக உறங்க வைக்கும். இதனால் உங்களின் உறக்க சுழற்சியில் மாற்றம் ஏற்படும். இதனால் இரவில் கெட்ட கனவுளும் எற்படும்.

செரிமானத்தின் கோளாறுகள்

இரவில் தாமதமாக உணவு உண்பதால், உங்களுக்கு வாயுத்தொல்லை ஏற்படுகிறது. இதனால், உணவு சரியாக செரிமானம் அடையாமல் போகிறது. இதனால் உங்கள் வயிற்றில் அதிகளவில் அமிலங்கள் சுரக்கிறது.

உடல் எடை அதிகரிப்பு

உடலின் வளர்சிதை இரவில் குறைகிறது. கலோரிகளை இது பகல் நேரத்தில் சரியாக கரைப்பதில்லை. தாமதமாக சாப்பிடுவதால், உடல் எடை அதிகரிக்கிறது.

மனஆரோக்கியத்தை பாதிக்கிறது

நீங்கள் சரியாக உறங்கவில்லையென்றால் அது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் உங்களால் உற்சாகமாக இருக்க முடியாது. தாமதமாக சாப்பிடுவது உங்கள் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் இதனால் மனஅழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை ஏற்படுகிறது.

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது

இரவில் தாமதமாக உறங்கினால் அது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

நள்ளிரவு பசியை கட்டுப்படுத்துவது எப்படி?

உங்களுக்கு இரவில் பசித்தால், நீங்கள் ஏற்கனவே இரவில் போதிய அளவு உட்கொண்டுவிட்டாலும் பசி ஏற்பட்டால், அதுகுறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கார்போஹைட்ரேட்களில் இருந்து விலகியிருங்கள்

கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து விலகியிருப்பது மிகவும் நல்லது. இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும். அதிகப்படியான ரத்த சர்க்கரை அளவை கொழுப்பாக்கும் வாய்ப்பை உடலுக்கு குறைவாகக் கொடுக்கும்.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு

உங்கள் இரவு உணவில் எப்போதும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் செரிமானமும் அதிகரிக்கும். இது உங்கள் உறக்கத்தின் தரத்தையும் அதிகரிக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்