வெண்டை மோர் குழம்பு : வெயில் காலத்துக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர்க்குழம்பு; சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெண்டை மோர் குழம்பு : வெயில் காலத்துக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர்க்குழம்பு; சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!

வெண்டை மோர் குழம்பு : வெயில் காலத்துக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர்க்குழம்பு; சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 12, 2025 02:09 PM IST

வெண்டை மோர்க்குழம்பு : காலையில் எடுத்து டீப் ஃப்ரை அல்லது ஷேலோ ஃப்ரை என எது வேண்டுமோ செய்து கொடுத்துவிடலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். வெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி என்று பாக்கலாம்.

வெண்டை மோர் குழம்பு : வெயில் காலத்துக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர்க்குழம்பு; சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
வெண்டை மோர் குழம்பு : வெயில் காலத்துக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர்க்குழம்பு; சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• இஞ்சி துண்டு – கால் இன்ச்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 2

• ஊறவைத்து துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்

• அரிசி – ஒரு ஸ்பூன்

(எந்த அரிசி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பச்சரிசி சிறந்தது. துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பையும் ஊறவைத்து அரைத்துக்கொள்ளலாம்)

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், ஊறவைத்த அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். மசாலாவை தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• வெண்டைக்காய் – 150 கிராம்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 4

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• தயிர் – கால் லிட்டர் (அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்)

செய்முறை

1. ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

2. அதே கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும்.

3. வர மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

4. அடுத்து தேவையான அளவு உப்புத் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

5. அடுத்து வதக்கிய வெண்டைக்காயை சேர்த்துக்கொள்ளவேண்டும். கடைசியாக அடித்து வைத்துள்ள தயிரை கலந்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

இந்த மோர் குழம்பை சுரைக்காய், பூசணிக்காய், கோவக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளிலும் செய்யலாம். சூப்பர் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக தயிர் சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்துகொடுத்துவிட்டால் அவர்களுக்கும் தயிர் சாப்பிட்டது போல் இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.