தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ladies Finger Masala Restaurant Style Fenugreek Masala Now You Can Make It At Home And It Will Be Amazing

Ladies Finger Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டை வெண்டைக்காய் மசாலா! இனி வீட்டிலே செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 11:00 AM IST

Ladies Finger Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டை வெண்டைக்காய் மசாலா! இனி வீட்டிலே செய்து அசத்தலாம்!

Ladies Finger Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டை வெண்டைக்காய் மசாலா! இனி வீட்டிலே செய்து அசத்தலாம்!
Ladies Finger Masala : ரெஸ்டாரன்ட் ஸ்டை வெண்டைக்காய் மசாலா! இனி வீட்டிலே செய்து அசத்தலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

சீரகம் – 1 ஸ்பூன்

இஞ்சி-பூண்டு- பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி – அரை ஸ்பூன்

ஆம்சூர் பொடி – 1 ஸ்பூன்

பொட்டுக்கடலைப் பொடி – ஒரு ஸ்பூன்

புளிக்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்

தயிர் – 4 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை – கைப்பிடியளவு

பிரியாணி இலை – 1

மிகப்பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை

மிகப்பொடியாக நறுக்கிய தக்காளி – அரை

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

க்ரீம் – ஒரு டேபிள் ஸ்பூன்

கசூரி மேத்தி – ஒரு டேபிள் ஸ்பூன்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

ஃபிரஷ் கிரீம் – கால் ஸ்பூன்

செய்முறை

வெண்டைக்காயை ஒரு இன்ச் பீஸ்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி நறுக்கிய வெண்டைக்காய்களை சிறிது உப்பு தூவி வதக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் சீரகம், இஞ்சி-பூண்டு-பச்சைமிளகாய் விழுதை சேர்க்க வேண்டும். தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாப் பொடி, ஆம்சூர் பவுடர். உப்பு, சிறிது தண்ணீர் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி, எடுத்து ஆறவிடவேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பொட்டுக்கடலைப்பொடி, மல்லித்தழை புளி, தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதேகடாயில் எண்ணெய் சேர்த்து பிரயாணி இலை சேர்த்த தாளித்து, மிகப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் ஃபிரஷ் க்ரீம், கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

உப்பு சேர்க்கும்போது கவனம் தேவை. ஏனெனில் வெண்டைக்காய் மற்றும் மசாலா என ஏற்கனவே தனித்தனியாக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்