Ladies finger Kurkure Fry : வழவழ வெண்டைக்காயை பார்த்தால் பிடிக்காதா? இப்டி செய்ங்க மொறுமொறுன்னு ஆயிடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ladies Finger Kurkure Fry : வழவழ வெண்டைக்காயை பார்த்தால் பிடிக்காதா? இப்டி செய்ங்க மொறுமொறுன்னு ஆயிடும்!

Ladies finger Kurkure Fry : வழவழ வெண்டைக்காயை பார்த்தால் பிடிக்காதா? இப்டி செய்ங்க மொறுமொறுன்னு ஆயிடும்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 18, 2024 12:14 PM IST

Ladies finger Kurkure Fry : வழவழ வெண்டைக்காயை பார்த்தால் பிடிக்காதா? இப்டி செய்து பாருங்கள் அது மொறுமொறுவென்று மாறிவிடும்.

Ladies finger Kurkure Fry : வழவழ வெண்டைக்காயை பார்த்தால் பிடிக்காதா? இப்டி செய்ங்க மொறுமொறுன்னு ஆயிடும்!
Ladies finger Kurkure Fry : வழவழ வெண்டைக்காயை பார்த்தால் பிடிக்காதா? இப்டி செய்ங்க மொறுமொறுன்னு ஆயிடும்!

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – கால் கிலோ

கடலை மாவு – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – கால் ஸ்பூன்

மல்லித் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

வெண்டைக்காயை கழுவி சுத்தமாக வெள்ளைத்துணியால் துடைக்கவேண்டும். பின்னர் அதை நீளவாக்கில் உள்புறத்தில் இருந்து கீறிக்கொள்ளவேண்டும்.

அதை ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் தனித்தனியாக சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொரித்த வெண்டைக்காய்களை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து, பெரிய வெங்காயம் தாளிக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து மீண்டும் வறுக்கவேண்டும்.

அனைத்தும் பச்சை வாசம் போனவுடன், அதில் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால், சூப்பர் சுவையில் வெண்டைக்காய் வறுவல் தயார்.

இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

வெண்டைக்காயின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

வெண்டைக்காயில் கொழுப்பு அறவே கிடையாது. இதில் பெக்டின் என்ற உட்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மைகொண்டது. இந்த கெட்ட கொழுப்பு இதய நோயை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் அதிகம் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு இதய நோய் ஏற்படாமல் காக்கப்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் சர்க்கரையை மெதுவாக ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இதனால் செரிமானம் குறைவாக நடக்கிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவி திடீரென உயர்வதில்லை. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத்தருகிறது.

சர்க்கரை நோயாளிகள், வெண்டைக்காயை வெட்டி தண்ணீரில் ஓரிரவு ஊறவைத்து, அந்த தண்ணீரை அடுத்த நாள் பருகினால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். மேலும் பச்சையாக உட்கொள்ளக்கூடிய காய்களும் ஒன்று வெண்டைக்காய்.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

மற்ற காய்கறிகளைவிட வெண்டைக்காயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் செல்களில் ஆக்ஸிடேட்டில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான செரிமான மண்டலத்தைக் கொடுக்கின்றன. இது குடல் புற்றுநோயைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, பொதுவான தொற்றுக்களை தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில், தினமும் உட்கொள்ளவேண்டிய வைட்டமின் சி சத்தில், 40 சதவீதம் உள்ளது.

அனீமியாவைத் தடுக்கிறது

வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது ரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் அனீமியாவைத் தடுக்கிறது.

உடல் எடை குறைப்பில் உதவுகிறது

100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வது தடுக்கப்படுகிறது.

குடல் புற்றுநோயைத் தடுக்கிறது

வெண்டைக்காயில், அதிகளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலம் முழுவதையும் சுத்தம் செய்யக்கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக குடலை சுத்தம் செய்யக்கூடியது. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மேலும் குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது

ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்பது கரு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வெண்டைக்காயில் அதிகளவில் ஃபோலேட்கள் உள்ளது. இதனால் இது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சி சீராகவும், முறையாகவும் நடப்பதை உறுதி செய்கிறது.