குஸ்கா ரெசிபி : சிம்பிள் குஸ்கா, சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குஸ்கா ரெசிபி : சிம்பிள் குஸ்கா, சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

குஸ்கா ரெசிபி : சிம்பிள் குஸ்கா, சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 06, 2025 03:10 PM IST

குஸ்கா ரெசிபி : பொதுவாக என்ன உணவு கொத்துவிட்டாலும் மிச்சம் வைக்கும் குழந்தைகள் இந்த குஸ்காவை மட்டும் முழுவதும் சாப்பிட்டுவிடுவார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

குஸ்கா ரெசிபி : சிம்பிள் குஸ்கா, சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
குஸ்கா ரெசிபி : சிம்பிள் குஸ்கா, சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

தேவையான பொருட்கள்

• பாஸ்மதி அரிசி – ஒரு கப்

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

• மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

• புதினா – ஒரு கைப்பிடியளவு

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 4

• பிரியாணி இலை – 1

• பட்டை – 1

• கிராம்பு – 2

• தேங்காய்ப்பால் – ஒரு கப்

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• நெய் – 2 ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தில் சிறிது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

2. அடுத்து தக்காளியில் கொஞ்சம் சேர்த்து குழைய மசித்துக்கொள்ளவேண்டும். அடுத்து மல்லித்தழை, புதினா என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதை எடுத்து ஆறவிட்டு மிக்ஸ் ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வெடிக்கவிடவேண்டும்.

4. அடுத்து இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் வேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து குழைய மசித்துக்கொள்ளவேண்டும்.

5. அனைத்தும் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன், அதில் தேங்காய்ப் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அடுத்து கழுவிய 20 நிமிடங்கள் ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து குக்கரை மூடி, வேக வைத்தோ அல்லது விசில் விட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான குஸ்கா தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா போதும் அல்லது ஏதேனும் கிரேவி கூட சுவையானதுதான்.