கோவக்காய் குழம்பு; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இட்லி, தோசைக்கும் பொருந்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோவக்காய் குழம்பு; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இட்லி, தோசைக்கும் பொருந்தும்!

கோவக்காய் குழம்பு; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இட்லி, தோசைக்கும் பொருந்தும்!

Priyadarshini R HT Tamil
Nov 11, 2024 04:48 PM IST

கோவக்காய் குழம்பை சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். இட்லி, தோசைக்கும் பொருந்தும். எனவே செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்.

கோவக்காய் குழம்பு; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இட்லி, தோசைக்கும் பொருந்தும்!
கோவக்காய் குழம்பு; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்; இட்லி, தோசைக்கும் பொருந்தும்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

கோவக்காய் – கால் கிலோ

(பழுத்தது வேண்டாம். பிஞ்சு பதத்தில் உள்ள கோவக்காய்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். மிகவும் பழுத்தது என்றால் ஒதுக்கிவிடாலம். அதை சுத்தம் செய்து நாலாக வெட்டிக்கொள்ளவேண்டும்)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – நெல்லிக்காய் அளவு

(சூடான தண்ணீரில் சேர்த்து ஊறவைத்து கரைத்து ஏடுத்துக்கொள்ளவேண்டும்)

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் – 2 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவேண்டும்)

சின்ன வெங்காயம் – 5

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தேங்காய் துருகல் – கால் கப்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – 2 ஸ்பூன்

(இந்த மசாலாப்பொருட்களை மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – பொடியாக நறுக்கியது கொஞ்சம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கஷ்மீரி மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்

(இதை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது விட்டு விடலாம். இது முற்றிலும் உங்கள் விருப்பம்)

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து கோவைக்காயை சேர்த்து 80 சதவீதம் வரை வதக்கவேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள், உப்பு, அரைத்து வைத்த மசாலாப் பொருட்கள், கரைத்த புளி என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.

ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை என அனைத்தும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து கஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து அதையும் பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

அனைத்தும் வதங்கி சுருண்டு வந்தவுடன் இதை குழம்பில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையான கோவக்காய் குழம்பு தயார். இது மீன் குழம்பு சுவையிலே இருக்கும். இதை சைவ மீன் குழம்பு என்றும் கூறலாம்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.