Kovakkai Fry: கட கடன்னு ஏறும் சர்க்கரையை மடமடன்னு குறைக்க உதவும் ருசியான கோவக்காய் பொரியல்.. ஈசியா செய்யலாம் வாங்க!
பல நன்மைகள் கொண்ட கோவைக்காயில் ஈசியா ஒரு பொரியல் செய்யலாம். ருசி அள்ளும்.. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கோவைக்காய் பொரியலை எளிமையான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.
பொதுவாக பலரும் கோவக்காய் என்றாலே அதை உணவில் சேர்த்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால் கோவைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரையை கட்டுப்படுத்தும், புற்றுநோயை எதிர்த்து போராட உதவும், சொரி, சிரங்கு உள்ளிட்ட பல தோல் பிரச்சினைகளை எதிர்த்து போராட உதவும். இப்படி பல நன்மைகள் கொண்ட கோவைக்காயில் ஈசியா ஒரு பொரியல் செய்யலாம். ருசி அள்ளும்.. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கோவைக்காய் பொரியலை எளிமையான முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.
கோவக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்
கோவக்காய் - 1/2 கிலோ
தேங்காய் எண்ணெய் -4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
வெங்காயம் -1
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி விதை -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
நிலக்கடலை - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
செய்முறை
கோவக்காயை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
ஒரு கடாயை சூடாக்கி அதில் ஒரு 2 ஸ்பூன் நிலக்கடலை, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் மல்லி விதை, கால் ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். மிதமான தீயில் வாசம் வரும் வரை இந்த பொருட்களை வறுத்து ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு பொரிய ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்க்க வேண்டும். அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்க வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய கோவக்காய் சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூளை சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து காயை மூடி வைத்து வேக விட வேண்டும். தேவை என்றால் அதில் லேசாக தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். காய் நன்றாக வெந்த பிறகு ஏற்கனவே அரைத்து எடுத்த மசாலா பொடியை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு நிமிடம் மூடி வைத்து வேக விட வேண்டும். பின்னர் காயை நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்து விடலாம். அவ்வளவு தான் ருசியான கோவைக்காய் பொரியல் ரெடி,
பருப்பு சாதம், சாம்பார் சாதம், வெரைட்டி ரைஸ்க்கு இந்த கோவக்காய் பொரியல் அட்டகாசமாக இருக்கும்.
டாபிக்ஸ்