Kotthu Dosai : கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீர்கள், கொத்து தோசை செய்ய கத்துக்கலாம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kotthu Dosai : கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீர்கள், கொத்து தோசை செய்ய கத்துக்கலாம் வாங்க!

Kotthu Dosai : கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீர்கள், கொத்து தோசை செய்ய கத்துக்கலாம் வாங்க!

Priyadarshini R HT Tamil
Feb 03, 2025 02:51 PM IST

Kotthu Dosai : கொத்து பரோட்டாவைப் போன்ற மற்றொரு ரெசிபி கொத்து தோசை. இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

Kotthu Dosai : கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீர்கள், கொத்து தோசை செய்ய கத்துக்கலாம் வாங்க!
Kotthu Dosai : கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீர்கள், கொத்து தோசை செய்ய கத்துக்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

தோசை மாவு – ஒரு கப்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

முட்டை – 1

மல்லித்தழை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கரம் மசாலா – கால் ஸ்பூன்

செய்முறை

தோசை மாவில் தோசைகளை கொஞ்சம் மொத்தமாக ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

அடுத்து முட்டை சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து தோசையை பிய்த்து அதில் சேர்த்து நன்றாக கொத்திவிடவேண்டும். கடைசியாக மல்லித்தழை, கரம் மசாலாத்தூள் தூவி இறக்கினால், கொத்து தோசை தயார்.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால், அவர்கள் இன்னும் வேண்டும், வேண்டும் என்று கேட்பார்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இதை தோசை அதிகம் மீந்து போய்விட்டாலும் செய்ய முடியும். இதேபோல் சப்பாத்திக்களிலும் செய்யலாம். அதுவும் நல்ல சுவையானதாக இருக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.