Kothu Parota : யம்மி மற்றும் டேஸ்டியான முட்டை கொத்து பரோட்டா! எப்போதாவது சாப்பிட்டு மகிழலாம்!
Kothu Parota : யம்மி மற்றும் டேஸ்டியான முட்டை கொத்து பரோட்டா, எப்போதாவது சாப்பிட்டு மகிழலாம்.
முட்டை கொத்து பரோட்டா, ஜங்க் உணவுதான் ஆனால் எப்போதாவது எடுத்துக்கொள்லாம்
ட்ரெண்டிங் செய்திகள்
தேவையான பொருட்கள்
பரோட்டா - 3
முட்டை - 4
சிக்கன் சால்னா - 1/2 கப்
எண்ணெய்
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
பூண்டு - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
இஞ்சி-பூண்டு விழுது – அரை ஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பில்லை – 2 கொத்து
மிளகுத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பரோட்டாக்களை சிறு துண்டுகளாக பிய்த்து வைக்கவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி வதங்கிய பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
மசாலா கலவையை ஓரம் தள்ளி, நடுவில், எண்ணெய் ஊற்றி, முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, முட்டை மேல் உப்பு, மிள்குத்தூள் சேர்த்து கலக்கவேண்டும்.
முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்தது கிளறவேண்டும்.
கறிவேப்பில்லை, பரோட்டா துண்டுகள் சேர்த்து கிளறவேண்டும்.
இறுதியாக சிக்கன் சால்னா சேர்த்து கிளறி இறக்கவேண்டும்.
முட்டை கொத்து பரோட்டா தயார்.
சிக்கன் சால்னா இல்லாவிட்டால், ஏதேனும் குருமா கூட போதுமானது. ஒன்றும் கலக்காவிட்டாலும் அது வித்யாசமான சுவையில் இருக்கும்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி அல்லது ஆனியன் ரைத்தா தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
கடைகளில் கொத்து பரோட்டா செய்யும்போது, அதை நன்றாக அந்த தவாவில் போட்டு, தோசை திருப்பில் வைத்து நன்றாக குத்தி, தட்டிவிடுவார்கள். அது மிகவும் நன்றாக இருக்கும். அதுபோல் வீட்டிலும் செய்யலாம். ஆனால் கவனமாக சிதறவிடாமல் செய்ய வேண்டும்.
பரோட்டா பிரியர்களுக்கு இந்த கொத்து பரோட்டா என்பது வரமே. ஆனால் உங்கள் அனைவருக்குமே தெரியும் பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு. ஆனால் நீங்கள் எப்போதாவது சாப்பிடு மகிழலாம்.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்