கூனிச் சம்பல் : நீண்ட நாட்கள் கெடாத கூனி கருவாட்டு சம்பல்! இலங்கை ஸ்டைலில் செய்யலாமா? இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கூனிச் சம்பல் : நீண்ட நாட்கள் கெடாத கூனி கருவாட்டு சம்பல்! இலங்கை ஸ்டைலில் செய்யலாமா? இதோ ரெசிபி!

கூனிச் சம்பல் : நீண்ட நாட்கள் கெடாத கூனி கருவாட்டு சம்பல்! இலங்கை ஸ்டைலில் செய்யலாமா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Apr 01, 2025 10:00 AM IST

கூனிச் சம்பல் : இந்த ரெசிபி இலங்கை ஸ்டைலில் செய்யப்படும் ரெசிபியாகும். இதை சாதத்துடன் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இந்த கூனி கருவாட்டு சம்பலை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

கூனிச் சம்பல் : நீண்ட நாட்கள் கெடாத கூனி கருவாட்டு சம்பல்! இலங்கை ஸ்டைலில் செய்யலாமா? இதோ ரெசிபி!
கூனிச் சம்பல் : நீண்ட நாட்கள் கெடாத கூனி கருவாட்டு சம்பல்! இலங்கை ஸ்டைலில் செய்யலாமா? இதோ ரெசிபி! (cook pad. com)

தேவையான பொருட்கள்

• கூனிக் கருவாடு – ஒரு கப் (நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவேண்டும், அதை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)

• பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கி, அதை எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்)

• பெரிய பூண்டு – 1 (இதையும் நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

• நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

• சோம்பு – ஒரு ஸ்பூன்

• கசகசா – கால் ஸ்பூன்

• சிலிலி ஃப்ளேக்ஸ் – அரை ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் சோம்பு சேர்த்து பொரியவிடவேண்டும்.

2. அடுத்து கசகசா, சில்லி ஃப்ளேக்ஸ, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவேண்டும்.

3. அடுத்து வறுத்து வைத்திருந்த வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து கழுவி சுத்தம் செய்து வறுத்து வைத்துள்ள கருவாட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்த பொடி செய்தும் சேர்க்கலாம் அல்லது கைகளிலேயே பொடித்தும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்தால் சூப்பர் சுவையான கூனி கருவாட்டு சம்பல் தயார்.

கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருக்கும் என்பதால், உப்பு சேர்ப்பதில் கவனம் தேவை. எப்போது கருவாட்டி என்ன செய்தாலும் அதற்கு உப்பு சேர்ப்பதில் கவனம் தேவை. எனவே தேவைப்பட்டால் கடைசியாக உப்பு தூவி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதை சாதம், டிபஃன் இரண்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டால் போதும். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். உங்களுக்கு தேவைப்படும் போது, ஊறுகாயைப் போல் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். குறிப்பாக நான் வெஜ் பிரியர்கள் விடவே மாட்டீர்கள். தீரத்தீர செய்து பாட்டிலை நிரப்பிக்கொண்டேயிருப்பீர்கள். சூப்பர் சுவையான இந்த கூனி கருவாட்டு சம்பலை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.