கொங்கு நாட்டு ஸ்பெஷல் உப்பு - மிளகு ரொட்டி; வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்ட்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொங்கு நாட்டு ஸ்பெஷல் உப்பு - மிளகு ரொட்டி; வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்ட்! இதோ ரெசிபி!

கொங்கு நாட்டு ஸ்பெஷல் உப்பு - மிளகு ரொட்டி; வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்ட்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 12, 2025 02:05 PM IST

கொங்கு நாட்டு ஸ்பெஷல் உப்பு-மிளகு ரொட்டி செய்வது எப்படி என்று பாருங்கள்.

கொங்கு நாட்டு ஸ்பெஷல் உப்பு - மிளகு ரொட்டி; வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்ட்! இதோ ரெசிபி!
கொங்கு நாட்டு ஸ்பெஷல் உப்பு - மிளகு ரொட்டி; வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்ட்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – ஒரு கப்

துவரம் பருப்பு – கால் கப்

(இரண்டையும் அலசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்)

வர மிளகாய் – 2

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 15

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

எண்ணெய் – கால் லிட்டர்

செய்முறை

ஒரு மணி நேரம் ஊறிய அரிசி மற்றும் துவரம் பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் வர மிளகாய், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

அதில் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்த நன்றாக ரொட்டி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும். இதை அதிக மெல்லிசாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் மீடியம் அளவுக்கு ரொட்டியைத் தட்டிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நல்ல சூடாக்கிக்கொள்ளவேண்டும். அதில் குட்டியாக தட்டிய ரொட்டிகளை சேர்த்து இருபுறமும் வெந்தவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இது பூரி போல் உப்பி வரும். சூப்பர் சுவையானதாக இருக்கும். இதற்கு தேங்காய் கெட்டி சட்னி சிறந்த காம்பினேஷன். இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட் அல்லது மாலை நேர ஸ்னாக்ஸ் என இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சூப்பர் சுவையானதாக இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளை பள்ளி விட்டு வீடு திரும்பும்போது, அவர்களுக்கு இதை செய்து கொடுப்பது நல்லது.

அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் நீங்கள் செய்வீர்கள். எனவே கட்டாயம் ஒருமுறை செய்து பாருங்கள். இட்லி, தோசை மாவு இல்லாவிட்டால், கஷ்டப்பட்டு சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையத் தேவையில்லை. இதை எளிதாக செய்துவிடலாம். எனவே கட்டாயம் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்.

சாக்லேட் கேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

முட்டை – 2

சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

கோகோ பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்

காபி டிகாஷன் – 50 மில்லி லிட்டர்

சாக்கோ சிப்ஸ்கள் – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

பன்னீரை துருவி, முட்டையையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்துக்கொள்ளவேண்டும். அதனுடன், அடுத்து சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவேண்டும். கோகோ பவுடர், காபி டிகாஷன் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

இதை கேக் டின்னில் ஊற்றி, அதன் மேல் சாக்கோ சிப்களை போட்டு வைக்கவேண்டும். இதை அவனில் வைத்தும் வேக வைத்துக்கொள்ளலாம் அல்லது ஸ்டீமரில் வைத்தும் வேகவைத்துக்கொள்ளலாம். சூப்பர் சுவையான சாக்கோ கேக் தயார்.

இதை உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி விட்டு வந்தவுடன் செய்துகொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும் இந்த கேக்கை நீங்கள் ஒருமுறை கட்டாயம் செய்து பாருங்கள். அடிக்கடி செய்யத் துவங்கிவிடுவீர்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.