தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kondaikadalai Kulambu Chickpea Gravy With Ground Spices For Marriage Abundance Of Health

Kondakadalai Kulambu : மணமணக்கு மசாலா அரைத்து வைத்த கொண்டைக்கடலை குழம்பு! ஆரோக்கியமும் ஏராளம்!

Priyadarshini R HT Tamil
Feb 06, 2024 09:53 AM IST

Kondakadalai Kulambu : மணமணக்கு மசாலா அரைத்து வைத்த கொண்டைக்கடலை குழம்பு! ஆரோக்கியமும் ஏராளம்!

Kondakadalai Kulambu : மணமணக்கு மசாலா அரைத்து வைத்த கொண்டைக்கடலை குழம்பு! ஆரோக்கியமும் ஏராளம்!
Kondakadalai Kulambu : மணமணக்கு மசாலா அரைத்து வைத்த கொண்டைக்கடலை குழம்பு! ஆரோக்கியமும் ஏராளம்! (mangai samayal)

ட்ரெண்டிங் செய்திகள்

தக்காளி – 1

மட்டன் மசாலா பொடி – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – கைப்பிடி

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – அரை கப்

முந்திரிபருப்பு – 6

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

தோலுரித்த சின்ன வெங்காயம் – அரை கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவேண்டும்.

தக்காளி. வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி கொள்ளவேண்டும்.

தேங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் மட்டன் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, அதனுடன் தேவையான அளவு தண்ணீர், வேக வைத்த கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விடவேண்டும்.

மசாலா வாடை போனவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவேண்டும்.

குழம்பு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி.

இதை பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

ஒரு கப் கொண்டைகடலையில் 269 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 14.5 கிராம், கொழுப்பு 4 கிராம், கார்போஹைட்ரேட் 45 கிராம், நார்ச்சத்துக்கள் 12.5 கிராம், மாங்கனீசு 74 சதவீதம், ஃபோலேட் 71 சதவீதம், காப்பர் 64 சதவீதம், இரும்புச்சத்து 26 சதவீதம், சிங்க் சத்து 23 சதவீதம், பாஸ்பரஸ் 22 சதவீதம், மெக்னீசியம் 19 சதவீதம், தியாமைன் 16 சதவீதம், வைட்டமின் பி6 13 சதவீதம், செலினியம் 11 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 10 சதவீதம் நிறைந்துள்ளது.

வயிறு நிறைந்த உணர்வை தரும்

இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுக்குள் வைக்கிறது. தாமதமாக செரிப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து, பசியை குறைக்கும் ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வது தடுக்கப்படுகிறது.

தாவர புரதம் நிறைந்தது

கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இறைச்சி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த உணவு. புரதச்சத்து எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம் மற்றும் தசையை வலுப்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலையில் உள்ள புரதச்சத்து மற்ற தானியங்களில் உள்ள புரதத்தைவிட சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது

இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் என்பதால், இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் உங்கள் பசியை கட்டுப்படுத்தி நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வதை தடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்