Kodo Millet Masala Kichadi : சத்தான காலை உணவு வரகரிசி மசாலா கிச்சடி! ஆரோக்கியம் அள்ளி தரும்!
Kodo Millet Masala Kichadi : சத்தான காலை உணவு வரகரிசி மசாலா கிச்சடி! ஆரோக்கியம் அள்ளி தரும்!
தேவையான பொருட்கள்
வரகரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பச்சை வேர்க்கடலை – கால் கப்
கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – கால் கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி – கால் கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (கீறியது)
இஞ்சி – ஒரு ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை பழம் - பாதியளவு
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
வரமல்லித் தூள் – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
கிராம்பு – 3
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலையை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
வரகரிசியை மூன்று முறை நன்றாக கழுவி அரை கப் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு பொரிந்ததும், பிரிஞ்சி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி பாதி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து பிரட்டி பொடியாக நறுக்கிய காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு, ஊறவைத்த பாசிப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். பின்னர் ஊறவைத்த வரகரிசியில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்துக்கொள்ளவேண்டும். பின் நன்றாக கலந்து மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவேண்டும்.
குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கிய பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து விருப்பப்பட்டால் சிறிது நெய் சேர்த்து கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும்.
சிறுதானியத்தில் செய்த உணவுகளை உடனே பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிவிடவேண்டும். சிறுதானிய உணவுகள் நேரம் ஆக ஆக கெட்டியாக மாறிவிடும். சாமை மற்றும் குதிரைவாலி அரிசியை வைத்து செய்தால் ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சரியாக இருக்கும்.
வரகரிசியின் நன்மைகள்
கொழுப்பை பராமரிப்பதில் உதவுகிறது.
பாக்டீரியா தொற்றுகளை சரிசெய்கிறது.
நீரிழிவு நோய்க்கு உதவும் வரகு.
புற்றுநோயை கட்டுப்படுத்தும் வரகு.
ஊட்டச்சத்து அதிகரிக்க உதவுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் வரகு மூட்டு வலியை போக்க பயன்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யவும், இதில் உள்ள அதிக பொட்டாஷிய சத்து மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்துவும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிகம் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சரிப்படுத்தி, மலச்சிக்கலை போக்கிறது.
வரகு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகிய இரண்டும் நாம் அதிகம் உட்கொள்வதை தடுக்கிறது.
வரகில் உள்ள புரதச்சத்து கொலஜென் என்று அழைக்கப்படுகிறது. இது சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. சருமத்தை காக்கிறது.
இதில் உள்ள ப்ரீபயோடிக் நார்ச்சத்துக்கள், குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்