Malaria vs Dengue: மலேரியா vs டெங்கு! கொசுக்களால் ஏற்படும் இந்த நோய் பாதிப்புகளின் காரணங்களும், நோய் தடுப்பு முறையும்
கொசுக்கள் காரணமாக வரும் நோய் பாதிப்புகளாக இருந்து வரும் மலேரியா, டெங்கு ஆகியவை ஏற்படும் காரணமும், அதன் ஆபத்துகளும் அதற்கான மருத்துவ சிகிச்சைகள், நோய் தடுப்பு, சிகிச்சை முறைகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மலேரியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் கொசுக்களுடன் தொடர்புடையது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி மற்றும் தசைவலி போன்றவை ஏற்படும். இந்த இரண்டு நோய்களுக்கான தடுப்பதற்கு, கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்றுதல், பூச்சி விரட்டிகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நோய் பாதிப்புகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், அவை ஆபத்தானதாக கூட மாறக்கூடும். மலேரியா, டெங்கு வேறு வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினம் கடைப்பிடிக்க இருக்கும் நிலையில், இந்த இரு நோய்களுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாம்.
மலேரியா என்றால் என்ன?
கொசுக்களால் பரவும் தொற்று நோயாக மலேரியா உள்ளது. பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட அனாபிலிஸ் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது