தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Know About These Benefits Of Mint Leaves For Hair Care

Mint Leaves: பொடுகு தொல்லைக்கு தீர்வாக இருக்கும் புதினா! தலைமுடி பராமரிப்புக்கு தரும் நன்மைகள் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 29, 2024 02:45 PM IST

பல்வேறு மருத்துவ குணநலன்கள் கொண்டிருக்கும் புதினா தலைமுடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொடுகு தொல்லைக்கு சிறந்த தீர்வாக இருப்பதுடன் முடியை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.

பொடுகு தொல்லை நீக்க உதவும் புதினா
பொடுகு தொல்லை நீக்க உதவும் புதினா

ட்ரெண்டிங் செய்திகள்

புதினா இலைகள் வெளிப்படையாக தலைமுடி வளர்ச்சிக்கும், பொடு தொல்லை நீக்கும் தன்மையும் கொண்டிருக்கிறது. தலைமுடி பராமரிப்பு புதினா என்னென்ன நன்மைகள் தருகிறது என்பதை பார்க்கலாம்

புதினாவில் இருக்கும் சத்துக்கள்

கீரை வகைகளுள் ஒன்றாக இருந்து வரும் புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்ப்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புசத்த, வைட்டமின் ஏ, நிக்கோடினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதை வைத்து பார்க்கையில் புதினா ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகவே உள்ளது. ந்துள்ளது.

புதினாவை சட்னி, ஜூஸ் என எவ்வாறாக பயன்படுத்தினாலும் அதன் சத்துக்களில் மாற்றம் ஏற்படாது என கூறப்படுகிறது

புதினா செய்யும் அற்புதங்கள்

அசைவ உணவுகளையும், கொழுப்பு பொருள்களையும் எளிதில் ஜீரணமாக்க உதவும் தன்மை கொண்டிருக்கும் புதினா, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கி, மலச்சிக்கலை நீக்குகிறது

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னையின்போது தீர்வு அளிக்கிறது. அதேபோல் ஆண்களுக்கு ஆண்மை குறைவை போக்கு அற்புத உணவாக உள்ளது. வயிற்று புழுக்களை அழித்து வாய் தொல்லையை போக்குகிறது.

மஞ்சள்காமாலை, வாதம், வறட்டு இருமல், ரத்த சோகை, நரம்பு தளர்ச்சி ஆகியவற்றுக்கு புதினா கீரை மருந்தாக பயன்படுகிறது. முகப்பரு, வறண்ட சருமம் இருப்பவர்கள் புதினா சாறு முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பின் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து டீக்கு பதிலாக பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தசை வலி, நரம்பு வலி, கீல்வாத வலிகளுக்கு தீர்வாக இருக்கும புதினா, ஆஸ்துமா பாதிப்பையும் குறைக்கிறது

தலைமுடி பராமரிப்புக்கு உதவும் புதினா

உடலில் உச்சந்தலை முதல் உள்லங்கால் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருவதோடு, பல பாதிப்புகளுக்கும் தீர்வாக இருந்து வருகிறது புதினா. தலைமுடி பராமரிப்பிலும் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இலைகள் கலந்து தலைமுடி அல்லது கூந்தலில் தடவி ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் முடியை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலைமுடியில் இருக்கும் பொடுகு காணாமல் போய்விடும். அத்துடன் தலைமுடியும் பளபளப்பாகி விடும்.

புதினாவில் இருக்கும் குளிர்ச்சி தன்மை உச்சந்தலை பகுதியை ஆற்றுப்படுத்துகிறது. இதனால் தலைமுடி உதிர்வும் குறைகிறது.

புதினா ஹேர் பேக்

புதினாவை அறைத்து அதனுடன் தேன், பாதாம் எண்ணெய் கலந்தால் இயற்கையான ஹேர் பேக் தயார் செய்யலாம்.

புதினா ஹேர் பேக் முடியின் வேர்களை வலுப்படுத்தவும், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

புதினா உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது

எதிர்வரும் கோடையில் தலைமுடி பராமரிப்பில் புதினா முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அதை வைத்து தலைமுடியை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்