தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Endorphin Benefits: வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் எண்டோர்பின்..! இயற்கையாக அதிகரிக்க வழிகள் என்ன?

Endorphin Benefits: வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் எண்டோர்பின்..! இயற்கையாக அதிகரிக்க வழிகள் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 03, 2024 08:30 PM IST

நீங்கள் வலியை உணரும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்கள் உடலில் இருந்து வெளியாகும் ரசாயனமாக எண்டோர்பின் உள்ளது. வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் இதை இயற்கையாக அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் எண்டோர்பின் இயற்கையாக அதிகரிக்க வழிகள்
வலி நிவாரணி ஹார்மோனாக இருக்கும் எண்டோர்பின் இயற்கையாக அதிகரிக்க வழிகள்

எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாகவும், மன அழுத்தம் நிவாரணியாகவும் செயல்படுகிறது. இவை நமது மைய நரம்பு மண்டலம் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி மூலம் வெளியிடப்படும் உடலின் ரசாயன தூதர்களாக செயல்படுகிறது. உடலில் ஏற்படும் வலியை நிர்வகிக்கவும், மகிழ்ச்சியை உணரவும் இந்த ஹார்மோன்களை வெளியிடப்படலாம்.

எண்டோர்பின் தரும் நன்மைகள்

நமக்கு ஏற்படும் காயம், ​​மன அழுத்தம் அல்லது கவலையாக உணரும்போது, சுயமரியாதையை அதிகரிக்க வேண்டும் போன்ற சூழ்நிலைகளில் எண்டோர்பின்கள் வெளியாகிறது. செக்ஸ், காதல், சிரிப்பு அல்லது உடற்பயிற்சி போன்ற இன்பமான செயல்களின் போதும் அவை வெளியிடப்படுகின்றன. எண்டோர்பின்கள் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் செய்கின்றன என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.