Tomato Side Effects: அளவுக்கு மிஞ்சினால் தக்காளியும் நஞ்சுதான்! அதிகம் சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் பாருங்க
அளவுக்கு அதிகமாக தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதனால் உடலில் பக்க விளைவுகளும், ஆபத்துகளும் ஏற்படலாம். இதைப்பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

உணவில் அதிகமாக தக்காளி சேர்ப்பதனால் உடலில் உண்டாகும் பாதிப்புகளை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு தக்காளியை அளவாக சாப்பிட்டால் நலமாக வழலாம்.
அடர் சிவப்பு நிறத்தில் சாறுகள் நிறைந்த காணப்படும் தக்காளி எந்த வகை உணவானாலும் அதன் சுவை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள புளிப்புத்தன்மை மற்ற உணவு சேர்மானங்களோடு சேர்ந்து நீங்கள் சமைக்கும் உணவுகளுக்கு புளிப்பு நிறைந்த புதுமையான சுவையை தருகிறது. விதைகளுடன் கூடிய புளிப்பும், கசப்பும் நிறைந்த இந்த காய்கறி வகையை பச்சையாகவும் சாப்பிடலாம்.
தக்காளி இல்லாத உணவில் நிறையான சுவையை காண முடியாது. அந்த அளவுக்கு உணவில் முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக கருதப்படும் தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளும் உண்டாகிறது என பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தக்காளியின் நன்மையை பொறுத்தவரை ஏராளமாக இருந்தாலும், அளவுக்கு மீறனால் அமுதமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, இதை அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால் ஆபத்துக்களை நாம அழைப்பதற்கு ஒப்பாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தக்காளி அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆபத்துகள் குறித்த பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், உடல் ஆரோக்கிய பயிற்சியாளருமான அவின் கெளல் விவரித்துள்ளார்.
தக்காளி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள்
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள் பிரச்னை பலருக்கு பொதுவாக ஏற்படும் பாதிப்பாக உள்ளது. தக்காளியில் உள்ள சில கலவைகளை செரிக்கும் தன்மை நமது உடலுக்கு போதிய அளவில் இல்லை. அந்த கலவைகளில் கால்சீயம், ஆக்ஸலேட் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இவை செரிமானம் செய்யப்படாத காரணத்தால் உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்றன. இவற்றிலுள்ள தாதுக்கள் படிந்து கற்களாக உருவாகி வலியை ஏற்படுத்துகின்றன.
அமிலத்தன்மை
தக்காளியில் உள்ள புளிப்பு சுவை காரணமாக இயல்பாகவே அதற்கு அமிலத்தன்மை இருப்பதை உறுதிபடுத்துகிறது. எனவே அதிக அளவில் தக்காளி சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் அல்லது அமிலத்தன்மை வீச்சு உருவாகிறது. உங்களுக்கு அடிக்கடி அமிலத்தன்மை அல்லது இரைப்பை உணவுக்குழாய் வீச்சு நோய் பாதிப்பு இருந்தால், தக்காளி சாப்பிடும் அளவை கண்காணிக்க வேண்டும். மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு பாதிப்புகளுக்கு ஏற்றவாறு குறைத்துகொள்ள வேண்டும்.
மூட்டு வலி
தக்காளியில் அல்கலாய்டு நிறைந்த சோலானின் அதிகமாக இருப்பதால் அவை மூட்டுகளில் வலியையும், வீக்கத்தை உண்டாக்குகிறது. உடலிலுள்ள திசுக்களில் கால்சீயம் அதிகரிப்பதனால் இவ்வாறு நிகழ்வதோடு மூட்டு பகுதிகளிலும் அழற்சியை உருவாக்குகிறது. உங்களுக்கு ஏற்கனவே மூட்டு வலி பிரச்னை இருந்தால், தக்காளி சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நலம்.
தோல்களில் நிறமாற்றம்
தக்காளியால் தோல்களுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் பல டிப்ஸ்களை கூறினாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதைப் பயன்படுத்தினாலோ அல்லது சாப்பிட்டாலோ தோல்களில் பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியாது. அதிக அளவ தக்காளி பயன்பாடு லைகோபெனோடெர்மியா என்கிற பாதிப்பு உண்டாகிறது. இவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான லைகோபீனால் ஏற்படும் ஒரு நிலையாக உள்ளது. இதன் காரணமாக உங்கள் தோல்களின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு, மந்தமான தோற்றத்தை உருவாக்கிறது. ஏனென்றால் தக்காளியில் உள்ள நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்டாக லைகோபீன் இருப்பதோடு, இதன் அளவானது நாளொன்றுக்கு 75 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒவ்வாமை
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை காரணமாக ஒவ்வாமை பாதிப்பு உண்டாகிறது. தோல்களில் வெடிப்பு, இருமல், தும்மல், தொண்டையில் அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்னைகள் தக்காளி சாப்பிடுவதால் நிகழ்கின்றன. எனவே இந்த பாதிப்புகள் இருப்பவர்கள் தக்காளியை விட்டு தள்ளி இருப்பது ஆரோக்கியத்தை பேனி காக்க உதவும்.

டாபிக்ஸ்