தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Red Banana: சுவை மிகுந்த செவ்வாழை பழத்தில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

Benefits of Red Banana: சுவை மிகுந்த செவ்வாழை பழத்தில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 08, 2024 05:30 PM IST

செவ்வாழை பழம் சுவை மிகுந்ததாக இருப்பதோடு இல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு என உங்கள் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை தருவதாகவும் உள்ளது. செவ்வாழை சாப்பிடுவதால் வயிறு உப்புசம், எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

சுவை மிகுந்த செவ்வாழை பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
சுவை மிகுந்த செவ்வாழை பழத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

மற்ற பழங்களை காட்டிலும் சுவை தூக்களாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது செவ்வாழை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதோடு பீட்டா கரோடீன், வைட்டமின் சி போன்ற உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் சத்துக்களும் ஏராளமாக இடம்பிடித்துள்ளன.

செவ்வாழையில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செரிமானத்துக்கு நல்லது

100 கிராம் செவ்வாழையில் 2 கிராம் அளவில் நார்ச்சத்து இருப்பதாக இந்திய உணவுக் கலவை அட்டவணைகள் (IFCT 2017) தெரிவிக்கின்றன. இதில் இருக்கும் கரையாத நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் பிரக்டோ-ஒலிகோசாக்கரைடு கொண்ட ப்ரீபயாடிக் ஆக இருப்பதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு நன்மை

செவ்வாழை பொட்டாசியத்தின் மூலமாக இருக்கிறது. இது இருதயத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவும் எலக்ட்ரோலைட்டுகள் முக்கியமானதாக பொட்டாசியத்தை கொண்டுள்ளது. உடலில் பொட்டாசியம் அளவு குறைந்துவிட்டால் (ஹைபோகலீமியா) உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய தசை பலவீனம் ஏற்படும். செவ்வாழை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தினசரி பொட்டாசியத்தின் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யலாம் என கூறப்படுகிறது

ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்தல்

100 கிராம் செவ்வாழையில் 25 கிராம் அளவில் கார்ப்போஹைட்ரேட்கள் இருக்கின்றன. ரத்த குளுக்கோஸை நிர்வகிப்பதில் இது நேரடி தொடர்பு இல்லாமல் இருந்தாலும், குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் டயட்ரி நார்ச்சத்து இருப்பதால், நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் உட்கொள்வது பாதுகாப்பானது என கூறப்படுகிறது. கிளைசெமிக் குறியீடு என்பது 0 முதல் 100 வரையிலான அளவுகோல், உணவுகள் எவ்வளவு விரைவாக ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன என்பதை அளவிட பயன்படுகிறது. இதில் செவ்வாழை 45 மதிப்பெண்களை பெற்றுள்ளன. இது ஒப்பீட்டளவில் குறைவு.

கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

பீட்டா கரோட்டின் என்பது வைட்டமின் A இன் முன்னோடியாகும், இது பார்வை உட்பட உயிரியல் செயல்முறைகளில் செயல்பட உதவுகிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. செவ்வாழையில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீனின் மூலங்கள் கூர்மையான கண் பார்வையை பெற உதவுகின்றன. வயது தொடர்பான மாகுலர் சிதைவைதடுக்க உதவுகின்றன. மாகுலர் சிதைவு என்பது பார்வை இழப்பை ஏற்படுத்தும் ஒரு கண் நோயாகும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்களின் ஆதாரம்

செவ்வாழையில் இருந்து வரும் கரோட்டினாய்டுகள், வைட்டமின் சி மற்றும் அந்தோசயனின்கள் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தை தடுக்க உதவுகின்றன.

உடலில் இந்த மூலக்கூறுகள் அதிகமாக இருந்தால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்துக்கு வழிவகுக்கும். இது புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது

100 கிராம் செவ்வாழை பழத்தில் 313 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாசோடைலேஷன் பண்புகளைக் கொண்டுள்ளன, இது ரத்த நாளங்களைத் தளர்த்த உதவுகிறது. எனவே ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. அதாவது சிஸ்டாலிக் அழுத்தம் 120 க்கும் குறைவாகவும், டயஸ்டாலிக் அழுத்தம் 80 க்கும் குறைவாகவும் உள்ளது.

செவ்வாழை சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள்

உடலில் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். இந்த வாழைப்பழங்களில் உள்ள புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றியமைத்து அனாபிலாக்டிக் எதிர்வினையை ஏற்படுத்தும். அதேபோல் சிலருக்கு வயிறு உப்புசம், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

ஒரு துண்டு செவ்வாழை பழத்தில் 90 கலோரிகள் உள்ளன. இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளதால், நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும். ஆனால் அதிகமாக உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்ககூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்