Pineapple Skin Tea: கரடுமுரடான பைனாப்பிள் தோலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய அற்புதங்கள் தெரியுமா?
பைனாப்பிள் பழத்துக்கு இணையாக கரடுமுரடாக இருக்கும் அதன் தோல்களில் டீ பருகி சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
உடல் ஆரோக்கியம்,சரும பாதுகாப்பு என் பல்வேறு வகைகளில் பலனளிக்கும் பழமாக பைனாப்பிள் இருந்து வருகிறது. பைனாப்பிள் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சருமத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. சருமத்தில் ஏற்படும் அழற்சி, வீக்கம், எரிச்சல், சிராய்ப்புகளுக்கு தீர்வாகவும் உள்ளது.
இனிப்பு சுவை மிக்க இந்த பழம் தோல் மீளுருவாக்கம், சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பைனாப்பிள் பழம் பார்ப்பதற்கு க்ரீம் போன்ற மஞ்சள் நிறத்தில்,சாப்பிடுவதற்கு மிருதுவாக இருக்கும் பழமாக உள்ளது. இதன் வெளிப்புற தோற்றம், அதாவது தோல் பகுதி முள் போன்று அமைப்புடன் இருக்கும். பைனாப்பிளை தோல் நீக்கனால் மட்டுமே சாப்பிட முடியும்.
சுவைக்கு மெதுவாக இருக்கும் பழமான பைனாப்பிளின் தோல்கள் கரடுமுரடாக இருந்தாலும், அந்த தோலிலும் சில சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பைனாப்பிள் தோல்களை வைத்து டீ தயார் செய்து பருகலாம். பைனாப்பிள் தோலில் டீ என்பது பலரும் ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
பைனாப்பிள் பழத்தின் தோலில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இனிப்பு சுவையுடன் கூடிய பருவகால பழமாக இருந்து வரும் பைனாப்பிள் பல்வேறு சத்துக்களை கொண்டிருந்தாலும் அதன் தோல்களை தண்ணீரில் சுட வைத்து பின்னர் வடிகட்டி பருகினால் ஆற்றலை பெறலாம். அந்த வகையில் இயற்கையான எனர்ஜி பானமாக திகழ்கிறது
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்களும், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பைனாப்பிள் தோல் டீ பருகுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு சமநிலை அடைகிறது. உடலினுள் ஏற்படும் பல்வேறு வகையான அழற்சி பாதிப்பை போக்கவும் செய்கிறது
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் பைனாப்பிள் பழத்தின் தோல்களில் டீ தயார் செய்து குடித்து வருவதன் மூலம் இதய ஆரோக்கியம் பலமடைகிறது. மிக முக்கியமாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை பருகுவதால் உடல் எடை நிர்வகிக்கபடுகிறது.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்