Potato Chips: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மொறு மொறுப்பான உருளை சிப்ஸில் இருக்கும் தீமைகள் தெரியுமா?-know about the harmful effects of potato chips - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Chips: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மொறு மொறுப்பான உருளை சிப்ஸில் இருக்கும் தீமைகள் தெரியுமா?

Potato Chips: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் மொறு மொறுப்பான உருளை சிப்ஸில் இருக்கும் தீமைகள் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 28, 2024 05:05 PM IST

உருளை கிழங்கு சிப்ஸ் பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்நாக்ஸாகவும், மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் நொறுக்கி தீனியாகவும் இருந்து வரும் உருளை சிப்ஸ் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உருளை சிப்ஸில் இருக்கும் தீமைகள்
உருளை சிப்ஸில் இருக்கும் தீமைகள்

உருளைகிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதென்பது ஒரு விதமான போதையாகவே உள்ளது. சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாவிட்டால் வெறும் உருளை கிழங்கு சிப்ஸை மட்டும் வயிறு முட்ட சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருந்து வருகிறது. அதனால் ஏற்படும் சில உடல் நல பாதிப்புகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. உப்பு, காரம் போன்ற பல்வேறு ப்ளேவர்களில் கிடைக்கும் உருளை சிப்ஸ் சாப்பிடுவதால் உடலுக்க என்னென்ன தீங்குகள் வரும் என்பதை பார்க்கலாம்.

உருளை சிப்ஸ் பாதிப்புகள்

பேக்கிங் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸில் உப்பு, கொழுப்பு, இனிப்பு நிறைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒன்றாக சாப்பிட்டால் மூளை சோர்வடைவதோடு, உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மூளை சோர்வடைந்தால் டோபமைன் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பானது போதை உணர்வுக்கான ஆதாரமாக உள்ளது. அந்த வகையில் உருளை கிழங்கை உங்களது வாயில் வைத்தவுடன் இந்த உணர்வுதான் ஏற்படுகிறது.

அதேபோல் மேற்கூறிய இனிப்பு, உப்பு, கொழுப்பு காம்போ உங்களுக்கு திருப்தி குறைவான உணர்வையே ஏற்படுத்துகிறது. இதை விளைவாக உங்களது மூளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.

இனிப்பு கலந்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் ரத்தஓட்டமானது நிக்கோடினை விட 20 மடங்கு வேகமாக செல்கிறது

உருளைக்கிழங்கு சிப்ஸ் மொறுமொறு என இருக்கவும், சுவையாகவும், வித்தியாசமான சுவைகளில் வழங்கவும் பல்வேறு கலவை இதன் தயாரிப்பாளர்கள் சேர்க்கிறார்கள். அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது

நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பிவிட்டால், மூளை நிரம்பியதாக சிக்னல் கொடுக்கும். ஆனால் அதிக அளவில் பதப்படுத்தபட்ட உணவாக அமைந்திருக்கும் சிப்ஸ்கள் சாப்பிட்டால் மிகவும் மெதுவாக வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதன் விளைவாக மூளை அதிகமாக சாப்பிடுமாறு தூண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.