Camcorder Day: டிஜிட்டல் யுகத்துக்கு முந்தைய பதிவு சாதனம்.. மறக்க முடியாத இனிய தருணங்களை சுமக்கும் கேம்கார்டர்கள்
Camcorder Day: இன்றைய டிஜிட்டல் யுகத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நம் நினைவுகளை, மறக்க முடியாத இனிமையான தருணங்களை பதிவு செய்ய உதவும் சாதனமாக திகழ்ந்தது கேம்கார்டர்கள்.

ஆண்டுதோறும் ஜனவரி 20 ஆம் தேதி கேம்கார்டர் தினம் கொண்டாடப்படுகிறது. மனித கண்டுபிடிப்புகளில் எல்லா காலத்திலும் பிரபலமான ஒன்றாக இருந்து வரும் கேம்கோடரை கௌரவிப்பதன் மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
கேமரா அல்லது விடியோ ரெக்கார்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, நம் நினைவுகள் அனைத்தையும் பதிவு செய்யும் கருவியாக நமது மூளையே இருந்து வந்தது. தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், விடியோக்களை ஒரே நேரத்தில் பதிவுசெய்து சேமிக்கும் ஒரு சாதனமாக இருந்து வரும் கேம்கார்டரின் கண்டுபிடிப்பு மனித வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.
கேமராகார்டர் தினம் வரலாறு
திருமணங்கள், பிறந்தநாள்கள், பட்டமளிப்பு விழாக்கள், குழந்தைகளின் இசை நிகழ்ச்சிகள் அல்லது மற்றவர்கள் யாரும் விரும்பாத சங்கடமான தருணங்கள் என எதுவாக இருந்தாலும், கேமராகார்டர்கள் அனைத்திலும் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. ஒரு காலத்தில் கேமராகார்டர்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால், வேடிக்கையான விடியோக்கள் உருவாக்குவதில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பது வரையிலும் பயன்படுத்தப்பட்டது. நம் மனதை வீட்டு அழியாத நினைவுகளை பதிவு செய்து வைத்திருக்கும் சாதனமாகவும், கேமராகார்டர்களை இயக்கும் விடியோகிராஃபர்கள் கொண்டாடும் நாளாக இந்த நாள் அமைகிறது.