உங்கள் வீட்டில் கொத்தமல்லி கறிவேப்பிலையை ப்ரஷாக வைக்க வேண்டுமா? இதோ கிட்சன் டிப்ஸ்கள்!
நாம் சமைக்கும் போது அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படும் பொருள்கள் தான் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை, இவை இரண்டையும் நாம் பெரும்பாலான சமையல் பொருட்களில் பயன்படுத்துகிறோம்.

நாம் சமைக்கும் போது அனைத்து விதமான உணவுகளிலும் பயன்படுத்தப்படும் பொருள்கள் தான் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை, இவை இரண்டையும் நாம் பெரும்பாலான சமையல் பொருட்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனை சேமித்து வைப்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கலாம். அதிலும் கொத்தமல்லியை குளிர்சாதன பெட்டியிலும் சேமித்து வைக்கலாம். வீட்டிலேயே கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை எப்படி சேமித்து வைப்பது என்பதை இங்கு காண்போம்.
கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகள் உணவுகளுக்கு நல்ல வாசனையையும் சுவையையும் சேர்க்கின்றன. ஆனால் இவற்றை கடைகளில் வாங்கினாலும் நீண்ட நாள் கெடாமல் வைத்திருக்க முடியாது. அது விரைவாக காய்ந்துவிடும். பல வழிகளில் இந்த இலைகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பதற்கான குறிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த முறைகள் மூலம் இவற்றை ப்ரஷ்ஷாக வைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கொத்தமல்லி இலைகள்
கொத்தமல்லி இலைகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும் குறிப்புகளில் முதலில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். பின் அதில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதில் கொத்தமல்லி இலைகளின் வேரை மூழ்க வைத்து நன்றாகக் கழுவ வேண்டும். கொத்தமல்லி இலைகளின் வாடிய இலைகளை மாற்றிய பின் இந்த சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கொத்தமல்லி இலைகளில் உள்ள நீரை ஒரு சுத்தமான காட்டன் துணியால் தண்ணீரை அகற்றவும். பின்னர் அரை கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இந்த கொத்தமல்லி இலையை வேருடன் சேர்க்கவும்.