Kidney Foods: 'சிறுநீரக பிரச்னையா?' - நீங்கள் உணவில் சேர்க்கவேண்டிய 5 உணவுகள்!
சிறுநீரக நோயுடன் தொடர்புடையவர்கள், சிறுதானியங்கள் முதல் பாசிப்பயிறு வரை, நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து மருத்துவர் பரிந்துரைப்பதைக் காணலாம்.
சிறுநீரக நோய் கண்டறிதல் பல மக்களுக்குப் பயத்தைத் தருகிறது. இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோயை நன்கு நிர்வகிக்க முடியும்,
சிறுநீரக நோய் வந்தால் பலரும் அஞ்சுகின்றனர். உங்கள் சிறுநீரகங்களை கவனித்துக்கொள்வதும், சரியான உணவை உட்கொள்வதும் உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்கவும் உதவும்.
நோய் மேலாண்மை என்று வரும்போது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது ஆகியவை முக்கியம். உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் சிறுநீரக நோய் ஏற்படலாம்.
குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு, மனக் கூர்மை குறைதல் போன்ற அறிகுறிகள் சிறுநீரக நோயின் அறிகுறிகளாகும்.
தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களை நிர்வகிப்பது ஒருவரின் உணவை கவனமாகப் பரிசீலிக்க உதவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரையினை உட்கொள்ள வேண்டும்.
உணவில் பொட்டாசியம் அல்லது பாஸ்பேட் அளவினை குறைத்துக் கொள்ளலாம். நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு வைட்டமின் டி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான உணவுகள்
டெல்லியின் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிர்வாக இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் குலாட்டி, சிறுநீரக நோய்களை நிர்வகிக்க உதவும் ஐந்து உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
1. மஞ்சள்: அழற்சி எதிர்ப்புப் பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள், தைராய்டு மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் இரண்டையும் ஆதரிக்கும். இதில் குர்குமின் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது. மேலும், சிறுநீரக நோயுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவும்.
2. தயிர்: இந்திய உணவு வகைகளில் பிரதானமான தயிர், அயோடினின் நல்ல மூலமாகப் பயன்படுகிறது. இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அவசியம். குறைந்த கொழுப்பினையோ, தயிரையோ தேர்வுசெய்யவேண்டும். ஏனெனில், இது பாஸ்பரஸில் குறைவாக உள்ளது.
3. கீரைகள்: கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இவை தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்குப் பங்களிக்கின்றன. அதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால், அவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மேலும் அவற்றில் இருக்கும் அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
4. பாசிப் பயிறு: புரதத்தின் வளமான ஆதாரமான பாசிப் பயிறு இருக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கு இதில் செய்யப்படும் உணவுகள் ஏற்றதாக இருக்கும். இதனை அவித்தும் சூப்களிலும் சேர்க்கலாம்.
5. தினை: கம்பு போன்ற தானியங்கள் மற்ற சில தானியங்களுடன் ஒப்பிடும்போது ஊட்டச்சத்து அதிகம் தரக்கூடியவை. அதில், பாஸ்பரஸ் குறைவாக உள்ளன. இவற்றை தினை ரொட்டி வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் வெவ்வேறு வடிவங்களில் உணவில் சேர்க்கலாம். இது சிறுநீரகத்திற்கு நட்பினைத் தருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்