தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kidney Stone This One Decoction Is Enough Beats The Stone In The Kidney And Expels It

Kidney Stone : இந்த ஒரு கசாயம் போதும்! சிறுநீரகத்தில் உள்ள கல்லை அடித்து வெளியேற்றிவிடும்!

Priyadarshini R HT Tamil
Mar 30, 2024 11:39 AM IST

Kidney Stone : இந்த ஒரு கசாயம் மட்டும் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அடித்து வெளியேற்றிவிடும்.

Kidney Stone : இந்த ஒரு கசாயம் போதும்! சிறுநீரகத்தில் உள்ள கல்லை அடித்து வெளியேற்றிவிடும்!
Kidney Stone : இந்த ஒரு கசாயம் போதும்! சிறுநீரகத்தில் உள்ள கல்லை அடித்து வெளியேற்றிவிடும்!

ட்ரெண்டிங் செய்திகள்

தண்ணீர் – ஒன்றரை லிட்டர்

உப்பு – கால் ஸ்பூன்

மிளகுத்துதூள் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

கால் கிலோ பீன்ஸ், உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் அனைத்தையும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும்.

பீன்ஸ் நன்றாக குழைய வேக வேண்டும். வெந்தபின், தண்ணீர் முக்கால் லிட்டராக குறைய வேண்டும்.

குறைந்த பின்னர், வடிகட்டி, முழுவதும் பருகவேண்டும். முழுவதுமாக பருகுவதில் சிரமம் இருந்தால், அதை ஒரு மணி நேர இடைவெளியில் முழுவதும் பருகிவிட்டால், சிறுநீரில் 8 எம்,எம் அளவு கொண்ட கல்லை அடித்து வெளியேற்றும்.

இதை கற்கள் வெளியேறும் வரை கட்டாயம் செய்துவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

பச்சை பீன்ஸில் உள்ள சத்துக்கள்

ஒரு கப் பீன்ஸில் 31 கலோரிகள் உள்ளன. 0 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 3.4 கிராம்கள் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள் கே 18 சதவீதம், சி 18 சதவீதம், வைட்டமின் பி9 9 சதவீதம், இரும்புச்சத்து 6 சதவீதம், பொட்டாசியச்சத்து 4 சதவீதம் உள்ளது.

பச்சை பீன்ஸின் நன்மைகள்

செரிமானத்துக்கு உதவுகிறது

பச்சை பீன்ஸில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. நார்ச்சத்துக்கள் மலத்தை இலகுவாக்குகிறது.

பசியை கட்டுப்படுத்துகிறது

சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதுதான் உங்களுக்கு மீண்டும் பசிக்கிறது. இதனால்தான் பிஸ்கட்கள், சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொண்டபின் உடனடியாக பசி உணர்வு ஏற்படும். அதற்கு பதில் பீன்ஸை எடுத்துக்கொண்டால் அது உங்களுக்கு சத்துக்களை கொடுக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பச்சை பீன்ஸில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள், இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு நல்லது. கால்சியம், எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன்தான் உங்களை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. எனவே பச்சை பீன்ஸை சாப்பிடும்போது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இதய நோய் ஏற்பட காரணமாகிறது. பச்சை பீன்ஸில் உள்ள ஃபோலேட்கள் மற்றம் பெட்டாசியம், உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பச்சை பீன்ஸில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் ஆரோக்கியமான கொழுப்பை சரியான அளவில் பராமரிக்க உதவும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்