தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kidney Stone Suffering From Kidney Stone Easy Way To Get Rid Of Stone A Way To Relieve Pain

Kidney Stone : சிறுநீரக கல்லால் அவதியா? கல்லை அடித்து வெளியேற்றும் எளிய வழி! வலியை போக்கும் முறை!

Priyadarshini R HT Tamil
Feb 05, 2024 12:20 PM IST

Kidney Stone : சிறுநீரக கல்லால் அவதியா? கல்லை அடித்து வெளியேற்றும் எளிய வழி! வலியை போக்கும் முறை!

Kidney Stone : சிறுநீரக கல்லால் அவதியா? கல்லை அடித்து வெளியேற்றும் எளிய வழி! வலியை போக்கும் முறை!
Kidney Stone : சிறுநீரக கல்லால் அவதியா? கல்லை அடித்து வெளியேற்றும் எளிய வழி! வலியை போக்கும் முறை!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் பரபரப்பான வாழ்க்கைக்கு இடையே எளிய குறிப்புகளை நீங்கள் கடைபிடித்தாலே போதும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

அதற்குதான் சில எளிய குறிப்புக்களை உங்களுக்காக கொடுத்து வருகிறோம். ஏனெனில் நமது பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் அவற்றை கடைபிடிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

சிறுநீரகத்தில் கல் இருந்தால், சிறுநீரக பை மற்றும் குழாயில் ஒருவித வலி ஏற்படும். இடுப்புப்பகுதிக்கும், சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் இடையில் ஒருவித வலி ஏற்படும்.

அப்போதுதான் உங்களுக்கு இந்த பிரச்னை தெரியவரும். மேலும் உங்களால் சரியான சாப்பிட முடியாது. ஒருவிதமான வாந்தியை ஏற்படுத்தும். மார்புப்பகுதிகளில் அதிக வலி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

முதலில் இந்த வலியை குறைக்கக்கூடிய ஒரு எளிய குறிப்பு குறித்து தெரிந்துகொள்ளலாம். அதை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சோம்பு – 2 ஸ்பூன்

(சோம்பு சிறுநீரக பெருக்கி, உடலில் இருக்கக்கூடிய நீரை வெளியேற்றும் வல்லமைகொண்டது. உடலில் உற்பத்தியாகும் கெட்ட நீரை வெளியேற்றும். உடல் சூட்டை குறைக்கும். அஜீரணக்கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகளை தீர்க்கக்கூடியது)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சோம்பு சேர்த்து அதில் அரை லிட்டர் தண்ணீர் கலந்துகொள்ள வேண்டும். அதை அடுப்பில் வைத்து அரை லிட்டர் தண்ணீர் கால் லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவேணடும்.

இதை வடிகட்டி அப்படியே பருகலாம். எப்போது வேண்டுமானாலும் இந்த தண்ணீரை பருகலாம். குறிப்பாக உங்களுக்கு வலி அதிகம் இருக்கும்போது எடுத்துக்கொண்டால் நல்ல ஆறுதல் கிடைக்கும்.

இதை குடித்த அரை மணி நேரத்திலேயே சிறுநீர் வெளியேற துவங்கி, வயிறு குறைவான உணர்வு ஏற்பட்டு உங்களுக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

சிறுநீரக கற்களை போக்கக்கூடிய எளிய வழி

ஒரு வாளியில் அரை வாளியளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு 30 ஐஸ் கட்டிகளை சேர்க்க வேண்டும். அதை சேர்த்த பின்னர் உங்களின் இரு பாதங்களும் மூழ்கும் அளவுக்கு கால்களை அதில் வைக்க வேண்டும். இதை ஒரு 15 நிமிடங்கள் வைத்துவிடவேண்டும்.

பின்னர் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்து ஆற்றில் உள்ள கற்கள் அடித்துக்கொண்டு வெளியேறுவதுபோல், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அடித்துக்கொண்டு சிறுநீர் வழியாக வெளியேறும்.

கல்லின் அளவு பெரிதாக இருக்கும்போது அது அடித்துக்கொண்டு வெளியேறுவது சிரமம். எனவே இதை 4 முதல் 5 நாட்கள் வரை செய்யவேண்டும். அதாவது கற்கள் வெளியேறும் வரை செய்ய வேண்டும்.

நீங்கள் வெறும் தரையில் சிறுநீர் கழிக்கும்போது இந்த கல் வெளியேறுவதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். எனவே இதை நீங்கள் பரிசோதித்து பார்ப்பதும் எளிது.

இந்த குறிப்புக்களை கட்டாயம் பின்பற்றி உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்