தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Stone : சிறுநீரக கல், பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு தீர்வு! 10 நாளில் பட்டுன்னு எடை குறைக்கலாம்! என்ன செய்யணும்?

Kidney Stone : சிறுநீரக கல், பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு தீர்வு! 10 நாளில் பட்டுன்னு எடை குறைக்கலாம்! என்ன செய்யணும்?

Priyadarshini R HT Tamil
Jun 30, 2024 10:57 AM IST

Kidney Stone : சிறுநீரக கல், பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு தீர்வு கிடைக்கும். 10 நாளில் பட்டுன்னு எடை குறைக்க முடியும். அதற்கு நீங்கள் பார்லியை பயன்படுத்தி கஞ்சி செய்து பருகவேண்டும்.

Kidney Stone : சிறுநீரக கல், பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு தீர்வு! 10 நாளில் பட்டுன்னு எடை குறைக்கலாம்! என்ன செய்யணும்?
Kidney Stone : சிறுநீரக கல், பிசிஓடி, பிசிஓஎஸ்க்கு தீர்வு! 10 நாளில் பட்டுன்னு எடை குறைக்கலாம்! என்ன செய்யணும்?

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

பார்லி – ஒரு கப்

மிளகுத்தூள் – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

செய்முறை

பார்லியை வாங்கி நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊறவைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதன் பிரஷர் அடங்கியவுடன், திறந்தால் அதில் கஞ்சி மற்றும் வெந்த பார்லியும் கிடைக்கும். அந்த கஞ்சியை மட்டும் வடிகட்டி அதில் உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து தினமும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். காலை உணவுக்கு பின்னர் சிறிது நேரம் கழித்து பருகுவது நல்லது.

பார்லியை வைத்து உப்புமா தயாரிக்க முடியும் அல்லது அதையும் நன்றாக அரைத்து அல்லது கடைந்து இந்த கஞ்சியிலே சேர்த்து பருகலாம்.

இதனால் நீங்கள் சிறுநீரகக் கல்லைப் போக்க முடியும். மேலும், பிசிஓஎஸ், பிசிஓடியைப் போக்க முடியும். உடல் எடையையும் குறைக்க முடியும். மேலும் பார்லியில் உள்ள நன்மைகளைப் பாருங்கள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள். 

பார்லியில் உள்ள சத்துக்கள்

பார்லி ஆரோக்கியம் அதிகமான தானியம். இதில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் மற்ற தாவர உட்பொருட்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது செரிமானத்தை சீராக்குகிறது. பசியை போக்குகிறது மற்றும் உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.

பார்லி அமெரிக்க உணவுகளில் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உடலில் கொழுப்பை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பேணுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை செய்யக்கூடிய பார்லி.

இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

பல நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள்

பசியை குறைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்தது

பித்தப்பை கற்கள் வராமல் தடுத்து பித்தப்பை அறுவைசிகிச்சை ஆபத்தை தடுக்கிறது

கொழுப்பை குறைக்க உதவுகிறது

இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

பார்லியில் செய்யப்படும் காலை உணவு, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பையும், ஓட்ஸ் உள்ளிட்ட மற்ற தானியங்களை விட அதிகளவில் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குடல் புற்றுநோயை தடுக்கிறது

பார்லியை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முழு தானியங்களுக்கு மாற்ற எடுத்துக்கொள்ளலாம். எளிதாகவும், குறைவான விலையிலும் கிடைக்கக்கூடியது பார்லி. இதை சூப் உள்ளிட்டவற்றில் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்