Kidney Stone Home Remedy : சிறுநீரக கற்களைப் போக்க சிறந்த வழிகளை தெரிந்துகொள்ளவேண்டுமா? இதோ டிப்ஸ்!
Kidney Stone Home Remedy : சிறுநீரக கற்களைப் போக்க சிறந்த வழிகளை தெரிந்துகொள்ளவேண்டுமா? அதற்கு உதவும் டிப்ஸ்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
சிறுநீரக கற்கள் ஏற்பட காரணங்கள் என்ன?
நமது உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்து விட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக படிந்து விடுகிறது.
குறிப்பிட்ட வகை உணவுகள், அதிக உடல் எடை, சில மருத்துவ கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் மற்றும் உணவு சப்ளிமென்ட்கள் ஆகிய அனைத்தும்தான், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணமாகின்றன.
சிறுநீர் பாதையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிறுநீரக கல்லால் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகம் முதல் வயிறுவரை இது தொடரும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிட்டால் சிறுநீர் தண்ணீராக இல்லாமல் திக்காகிவிடும்.
அவை வெளியேறும்போது கடுமையான வலி ஏற்படும். ஆனால் சிறுநீரகக் கற்கள் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தாது. அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, இயற்கை முறையில் வெளியேற்றுவது சிறந்தது.
அறுவைசிகிச்சை செய்யும்போது, அது மீண்டும், மீண்டும் உருவாகத் துவங்கும். சிறுநீரகத்தில் கற்கள் வந்துவிட்டாலே நாம் அதிக தண்ணீர் பருகவேண்டும். அதிகளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அதிக முறை சிறுநீர் கழிப்போம்.
அதன் வழியாக கல்லும் வெளியேறிவிடும். வலியை குறைக்க வலி நிவாரணி எடுத்துக்கொள்ளப்படும். சிறுநீர் பாதையில் கற்கள் தேங்கிவிட்டால், சிறுநீரக தொற்று ஏற்பட்டு, அறுவைசிகிச்சை வரை கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. எனவே சிறிய அளவில் இருக்கும்போதே கவனம் தேவை.
அறிகுறிகள்
சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் அவற்றை போக்கும் இயற்கை வழிகள்
வயிறு முதல் சிறுநீர் பாதையில் கடும் வலி
விட்டுவிட்டு வலி ஏற்படும்.
சிறுநீர் கழிக்கும்போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும்.
சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் கழித்தல்
கடும் துர்நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்
வழக்கத்தை விட அதிகம் சிறுநீர் கழிப்பது அல்லது குறைவாக கழிப்புது
வாந்தி மற்றும் மயக்கம்
காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்படும்போது உடலில் அதிக குளிர் மற்றும் நடுக்கம் ஏற்படுவது,
இந்த அறிகுறிகள் அதிகம் ஏற்படும்போதும் அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறும்போதும் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் நீங்கள் பின்பற்றவேண்டியது இவைதான்
தினமும் குறைந்தது 12 முதல் 15 டம்ளர் தண்ணீர் பருகவேண்டும். இதனால் நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது கற்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது.
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சிறுநீரகத்தில் உள்ள சிறிய கற்களை துண்டாக உடைத்து அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது. எனவே நீங்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை துண்டுகளாக நறுக்கி அப்படியே சேர்க்கவேண்டும். அதனுடன் 10 புதினா இலைகள், ஒரு வெள்ளரியை நறுக்கி சேர்த்து ஓரிவு ஊறவைத்து டீடாக்ஸ் தண்ணீரை தயாரிக்க வேண்டும். இதை அடுத்த நாளில் உங்களுக்கு தாகம் ஏற்படும்போது பருகினால், உங்களுக்கு நல்லது.
துளசி இலைகளை தண்ணீரில் ஓரிவு ஊறவைக்கவேண்டும். அதை 6 வாரங்கள் தொடர்ந்து பருகினால், சிறுநீரில் உள்ள கற்கள் உடைந்துவிடும். ஆனால் ஆறு வாரங்களுக்கு மேல் பருகக்கூடாது.
மாதுளைச்சாறு உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டது. இதை தினமும் பருகினால் உங்கள் சிறுநீரகத்தில் கற்களை அகற்றிவிடும்.
எனவே இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றி நீங்கள் பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்