தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Stone : சிறுநீரகக் கற்களை அடித்து வெளியேற்றும் மாயம் செய்யும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Kidney Stone : சிறுநீரகக் கற்களை அடித்து வெளியேற்றும் மாயம் செய்யும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
May 13, 2024 11:51 AM IST

Kidney Stone : சிறுநீரகக் கற்களை அடித்து வெளியேற்றும் மாயம் செய்யும் இந்த பானத்தை வெறும் வயிற்றில் 5 நாள் மட்டும் பருகி பலன்பெறுங்கள்.

Kidney Stone : சிறுநீரகக் கற்களை அடித்து வெளியேற்றும் மாயம் செய்யும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!
Kidney Stone : சிறுநீரகக் கற்களை அடித்து வெளியேற்றும் மாயம் செய்யும்! இந்த ஒரு பானம் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

சிறுநீரகக் கற்களை அறுவைசிகிச்சையின்றி இயற்கை முறையில் அடித்து வெளியேற்றும். இந்த ஒரு பானத்தை 4 நாட்கள் பயன்படுத்திவர சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வலியின்றி வெளியேறிவிடும்.

சிறுநீரகக்கற்கள் வெளியேறும்போது, உடல் தளர்ச்சி, உடல் சோர்வு ஏற்படும். இதை பருகும்போது, இவை எதுவும் இல்லாமல், சிறுநீரகக் கற்கள் இயற்கையான முறையில் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்

மிளகு – 9

சின்ன வெங்காயம் – 1

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

தேன் – 4 ஸ்பூன்

தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை

மிளகு மற்றும் சின்ன வெங்காயத்தை உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேணடும்.

ஒரு டம்ளர் தண்ணீரில், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் இடித்து வைத்த அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

உங்களுக்கு தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு அதிகம் அல்லது குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் போதுமான அளவு. சோர்வு அதிகமாக உணர்ந்தால் அதிகளவு எலுமிச்சை சேர்த்துக்கொள்ளலாம். அதற்கேற்றார்போல் தேனின் அளவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் நன்றாக கலந்து, பல் துலக்கிவிட்டு, இந்த பானத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரை மணி நேரம் பருகவேண்டும்.

இதை பருகியபின் இரண்டு மணி நேரம் வேறு எந்த உணவோ அல்லது தேநீர், காபியோ எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஆனால், ஒரு லிட்டர் வரை தண்ணீர் பருகவேண்டும். அப்போதுதான் சிறுநீர் பெருகி கற்கள் அடித்துக்கொண்டு வெளியேறும்.

இதை 5 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்லின் அளவு சிறியது என்றால் 2 நாளிலே வெளியேறிவிடும். கல்லின் அளவுக்கு ஏற்றாற்போல் நாட்களை அதிகரிக்க வேண்டும். இந்த பானம் எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

இதை பருகுவதற்கு முன் உங்கள் கல்லின் அளவை ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் தொடர்ந்து பருகிவர, பலன் தரும். மீண்டும் ஸ்கேன் செய்து உறுதி செய்துகொள்ளுங்கள்.

உடல் சோர்வின்றி, வலியும் இன்றி, உயிர்ச்சத்துக்களை குறைக்காமல் சிறுநீர கற்களை வெளியேற்ற முடியும். எளிமையான இந்த டிப்ஸ் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்