Kidney Stone : 'சிறுநீர கல்: ' ஹோமியோபதி மருத்துவம் சொல்லும் வழிமுறைகள்' மருத்துவர் ஜானகி பேட்டி இதோ!
Kidney Stone : சேரும் அதிகப்படியான உப்பு, பொட்டாசியம், கால்சியம், யூரியா போன்ற பல்வேறு தாதுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகும் போது தேவையற்ற தாதுக்கள் சிறுநீரகங்களில் படியத் தொடங்கும். இந்த படிமங்கள் தான் சிறு சிறு கற்கள் போல் மாறும்

Kidney Stone : மனித உடலில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சிறுநீரக கற்கள்.. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகின்றன என்றால் எப்படி என்ற கேள்வி எழுகிறது அல்லவா.. அப்படி உருவாகி விட்டால் வலி நம்மை ஒரு வழி செய்து விடும். வலியில் படுத்து உருளுவதும் சத்தம் போடுவதும் என்று ஆளை ஒரு மாதிரி ஆக்கிவிடும். இத்தகைய கேள்விகளோடு மதுரையை சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி அவர்களிடம் கேட்ட போது தெளிவாக விளக்கினார்.
சிறுநீரக கற்கள் என்பது இரு பாலருக்கும் எல்லா வயதினருக்கும் பொதுவானது. நமது உடலில் சேரும் அதிகப்படியான உப்பு, பொட்டாசியம், கால்சியம், யூரியா போன்ற பல்வேறு தாதுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. இந்த கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகும் போது இந்த தேவையற்ற தாதுக்கள் சிறுநீரகங்களில் படியத் தொடங்குகின்றன. இந்த படிமங்கள் தான் காலப் போக்கில் சிறு சிறு கற்கள் போன்ற அமைப்பாக மாறி விடுகிறது. தண்ணீர் குறைவாக குடிக்கும் போதும் உணவுப் பழக்கம் சிறுநீர் வெளியேற்றாமல் அடக்கி வைத்தல் போன்ற விசயங்களும் கற்கள் உருவாக காரணமாக அமைகிறது. காலப்போக்கில் அது பெரிய அளவில் மாறி விடும். சூழலில் சிறுநீர் குழாய்களின் வழியாக வெளியேற முடியாமல் போகிறது. இந்த மாதிரி நேரங்களில் தான் அதிக வலி குறிப்பாக கீழ் முதுகு வயிறு போன்ற பகுதிகளில் ஏற்படும். சிலருக்கு சிறுநீரோடு ரத்தமும் வெளியே வருவது உண்டு. கற்கள் அளவில் சிறியதாக இருக்கும் போது கடுமையான வலியோடு தானாகவே சிறுநீரில் வெளியேறுவதும் உண்டு.
சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள்
சிறுநீரக கற்கள் பிரச்சினைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. எந்த சிகிச்சையும் கல்லின் அளவு எண்ணிக்கை, வடிவம், கற்களின் வகை, கற்கள் இருக்கும் இடம் என்பதை பொறுத்து மாறுபடும். பொதுவாக கால்சியம் ஆக்சலேட் வகை கற்கள் அதிகமாக உள்ளது. இவை தவிர சிஸ்டைன் கற்கள் யூரிக் அமிலம் தொடர்புடையதாக உள்ள கற்கள் ஸ்ட்ரூவைட் கற்கள் போன்றவையும் உள்ளன. சிலருக்கு பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் கற்கள் உருவாகின்றன. சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டு படுத்து உருள்வதையும் காணலாம். சிலருக்கு வாந்தியும் ஏற்படும்.