தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kidney Problems Do You Have Kidney Problems Here Are The Foods You Should Eat Every Day

Kidney Problems: உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளதா? நீங்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 19, 2024 07:00 PM IST

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யவோ, மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கவோ கூடாது. மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறுநீரக நோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

 உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளதா? நீங்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ
உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளதா? நீங்கள் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ

ட்ரெண்டிங் செய்திகள்

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யவோ, மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கவோ கூடாது. மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறுநீரக நோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு, மன செயல்பாடு இல்லாமை போன்ற அறிகுறிகள் தென்படும். சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது கடினம், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிறுநீரக நோய் உள்ளவர்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ள உணவுகள் மற்றும் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகளை உண்ணுங்கள். பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடைகளில் வாங்கப்படும் உணவு பொருட்களில் சோடியம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கான உணவுகள்

1. மஞ்சள்: அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற மஞ்சள் தைராய்டு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. சிறுநீரக நோயால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

2. தயிர்: இந்திய சமையலில் தயிர் பிரதானம். இதில் தைராய்டு செயல்பாட்டிற்கு அவசியமான அயோடின் உள்ளது. சிறுநீரகத்தைப் பாதுகாக்க தினமும் தயிர் சாப்பிடுங்கள். குறைந்த கொழுப்புள்ள தயிரை தேர்வு செய்யவது நல்லது.

3. கீரைகள்: வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த கீரைகளை சாப்பிடுவது தைராய்டு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இவற்றின் அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பை பாதுகாக்கிறது.

4. பருப்பு: பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. எனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு வெந்தயம் மிகவும் நல்லது.

5. தானியங்கள்: மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது தானியங்கள் மிகவும் நல்லது. இவற்றில் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. ரொட்டி மற்றும் பலவிதமான உணவு வகைகளை சோளம் போன்ற தானியங்களுடன் சமைக்கலாம். இவற்றை சாப்பிட்டால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்