தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Health : உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்!

Kidney Health : உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்!

Priyadarshini R HT Tamil
Apr 30, 2024 04:17 PM IST

Kinney Health : உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க நீங்கள் பின்பற்றவேண்டிய விதிகள் இவைதான்.

Kidney Health : உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்!
Kidney Health : உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க நீங்கள் செய்யவேண்டியது இதைத்தான்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது உங்கள் உடலில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மற்ற மினரல்களை உடலுக்கு அளிக்கிறது. உடல் நலனுக்கு தேவையான ஹார்மோன்களையும் வழங்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் நமது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கங்களால் உங்கள் சிறுநீரகங்கள் நாள்பட்ட சிறுநீர தொற்றுகளுகு ஆளாகிறது.

நம் அன்றாட வாழ்வில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறோம். அவற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒருவழி உண்டென்றால், அது தடுப்பு முறைதான். நீங்கள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமெனில் அதற்கு இந்த 8 கோல்டன் விதிகள் உங்களுக்கு உதவும். அவற்றை கடைபிடித்தால் உங்களின் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.

வழக்கமான உடற்பயிற்சிகள்

உங்கள் இதய ஆரோக்கியத்தை வழக்கமான உடற்பயிற்சிகள் மேம்படுத்தும். இதனால் நாள்பட்ட சிறுநீரக தொற்றை அது போக்குகிறது. எனவே உங்கள் சிறுநீரக ஆரோக்கியம் மட்டுமல்ல ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடியுங்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உப்பு குறைவான உணவை சாப்பிடவேண்டும். கொழுப்பு குறைவாக சாப்பிடும்போது, அது சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உங்களின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை பரிசோதித்துக்கொள்ளுங்கள்

உங்கள் ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்கள் வருவதை தடுக்கும்.

நீர்ச்சத்துடன் இருங்கள்

உங்கள் உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக்கொண்டால், அது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்

புகைப்பிடிக்கும் பழக்கம் சிறுநீரகத்தை அதிகளவில் பாதிக்கும். எனவே புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டாயம் கைவிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

வலிநிவாரணிகள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது

உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை வலிநிவாரணிகள் குலைக்கும். எனவே, உடலின் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமெனில், தேவையற்ற வலி நிவாரணிகளை தவிர்க்க வேண்டும் அல்லது பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பரிசோதனைகள்

வழக்கமான பரிசோதனைகள் மற்றும் அதன் மூலம் சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்தால் அதை முன்னரே தெரிந்துகொள்ள முடியும். எனவே குறிப்பிட்ட கால அளவில் பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது.

ஆதாரத்தின் அடிப்படையில் போதிய சிகிச்சை செய்ய வேண்டும்

ஆதாரத்தின் அடிப்படையில் போதிய சிகிச்சை செய்வது மிகவும் அவசியம். ஆதாரம் சேகரித்து சிகிச்சை செய்யும்போதுதான், அது தேவையற்ற சிகிச்களை தவிர்க்க உதவுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்

கொழுப்பு நிறைந்த மீன், முட்டைகோஸ், கிரான்பெரிகள், குடைமிளகாய், ப்ளூபெரிகள், கீரைகள், ஆலிவ் எண்ணெய், பூண்டு, வெங்காயம், காளிஃப்ளவர், முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள் ஆகியவை சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய உணவுகள் ஆகும்.

இந்த விதிகளை கடைபிடித்து, இந்த உணவுகளையும் சாப்பிட்டு, உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். சிறுநீரக ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம் என்பதற்கிணங்கள் நீங்கள் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்