Kidney Care : அதிக புரதம் சிறுநீரகத்துக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துமா? தடுக்க செய்யவேண்டியவை என்ன?
Kidney Care : அதிக புரதம் சிறுநீரகத்துக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துமா? தடுக்க செய்யவேண்டியவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்
நம் உடலில் உள்ள கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றக் கூடிய உறுப்புகளுள் முக்கியமானது சிறுநீரகம். அதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சில பழக்கங்களை கடைபிடிக்கவேண்டும். சிறுநீரகத்துக்கு சேதத்தை ஏற்படுத்துவது எது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
குறைவாக பதப்படுத்தப்பட்ட உணவு, எந்த சோடியம் உப்புக்களும் சேர்க்காமல், பச்சை காய்கறிகளுடனும், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் புரதங்கள் சேர்த்து சாப்பிடும் உணவுதான் உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மற்றும் அதிகரிக்கும் உணவாகும். தினமும் நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகளில் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்க எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பெரிகள்
ஸ்ட்ராபெரி, ராஷ்பெரி மற்றும் ப்ளூபெரிகள் ஆகியவற்றை நீங்கள் தினமும் காலையில் உட்கொள்ளவேண்டும். இவற்றில் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ஆந்தோசியானின்களும் அடங்கியுள்ளது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
மீன்
அசைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு கிடைத்த வரம் என்றால் அது மீன்தான். கொழுப்பு நிறைந்த சால்மன், மெக்ரீல் மற்றும் டிரவுட் போன்ற மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்களும் நிறைந்துள்ளது. மேலும் இது சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்கவும், நீரிழவு நோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கவும் உதவுகிறது.
கீரைகள்
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றில் அதிகளவில் உடலில் நீர்ச்சத்துக்களை தக்கவைக்கும் சக்திகள் உள்ளன. மேலும் இவற்றில், கலோரிகளும் குறைவு. இதில் வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளது. இது நமது உடலுக்கும் நன்மையைக் கொடுக்கும்.
கொழுப்பு குறைவான பால் பொருட்கள்
யோகர்ட், கொழுப்பு கலந்த பால் போன்ற கொழுப்பு இல்லாத அல்லது கொழுப்பு குறைவாக உள்ள பால் பொருட்கள் நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
காபி
நீர்ச்சத்துக்கள் குறித்து பேசும்போது, காபி பருகுவதும் உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் மற்றொரு வழியாகும். வடிகட்டப்பட்ட காபியுடன், குறைவான சர்க்கரை சேர்த்து பருகினால் உங்களுக்கு நல்லது.
முழு தானியங்கள்
உங்கள் உடலில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்க மற்றும் மினரல்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்றால், ஓட்ஸ், பார்லி, கோதுமை, பிரவுன் அரிசி மற்றும் குயினோவா ஆகியவற்றில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை உங்கள் சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் சி சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. இது நமது உடலுக்கத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது. இதில் மற்ற காய்கறிகளைவிட குறைந்த அளவு பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நல்லது.
முட்டைகள்
சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் தங்கள் புரதச்சத்துக்கள் உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். புரதச்சத்துக்கள் உங்கள் ரத்தத்தில் கழிவுகளை அதிகம் சேர்க்கும். ஆனால் அப்படி நேரும் கூடுதல் கழிவுகளை சிறுநீரகங்களால் நீக்க முடியாது. எனவே ஒருவர் அன்றாட வாழ்க்கையில் முட்டைகளை மட்டுமே புரதச்சத்துக்களுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். மற்ற அதிக புரதச்சத்துக்களை தவிர்க்கவேண்டும்.
டாபிக்ஸ்