Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

Priyadarshini R HT Tamil
May 19, 2024 09:20 AM IST

Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!
Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

சிறுநீரில் ரத்தம் வருவது

சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஹீமட்டூரியா என்று மற்றொரு பெயரும் உண்டு. இது சிறுநீரக புற்றுநோயின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்று. உங்கள் சிறுநீர் சிவப்பு அல்லது அரக்கு வண்ணத்திலோ அல்லது வேறு பழுப்பு நிறத்திலோ வந்தால், சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் செல்கள், சிறுநீரக பாதையில் ரத்தத்தை கசியவிடுகிறது என்பது பொருள்.

பின்புறத்தில் வலி

பின்புறத்தின் கீழ் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுவது அல்லது சோர்வாக உணர்வது ஆகியவை சிறுநீரக புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். புற்றுநோய் வளர வளர சுற்றியுள்ள திசுக்களிலும், கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

கட்டி

கட்டி பெரிதாகும்போது, சிறுநீரகங்களுக்கு அருகில் கட்டியாக தோல் வழியாக பார்த்தாலே எளிதாக தோன்றும் அளவுக்கு இருக்கும். இது வயிற்றில் அல்லது உடலின் ஒருபுறத்தில் இருக்கும்.

சோர்வு

தொடர் சோர்வு, நீங்கள் ஓய்வெடுத்தாலும் குறையாமல் இருக்கும். இது சிறுநீர புற்றுநோய் அல்லது அதற்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் ஏற்படலாம். புற்றுநோய் தொடர்பான சோர்வு, உங்களை உடல், உணர்வு மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

லேசான காய்ச்சல்

விவரிக்க முடியாத, காய்ச்சல் அவ்வப்போது விட்டுவிட்டு ஏற்படும். இது புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு பதிலாகும். இந்த சூழலில் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் காட்டவேண்டும்.

பசியின்மை

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி இருக்காது. இது புற்றுநோயால் உடலில் ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பாகும். பசியே சுத்தமாக இருக்காது என்று இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பார்கள். சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவிப்பார்கள். எனவே இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் கவனமுடன் செயல்படவேண்டும்.

எடை குறைப்பு

நீங்கள் எடை குறைப்பில் இல்லாமலே எடை கடுமையாக குறைவதும். உங்களுக்கு சிறுநீர புற்றுநோய் உள்ளது என்பதன் முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் தனித்தனியாக இருக்கும்போது கவலை வேண்டாம். ஆனால் அனைத்தும் ஒருவருக்கு ஏற்படும்போது நீங்கள் கவனமுடன் இருக்கவேண்டும்.

அனீமியா

உங்கள் உடலில் ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்கள் குறையும்போது, அனீமியா நோய் ஏற்படுகிறது. சிறுநீரக புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அல்லது சிறுநீரக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அதன் பக்கவிளைவாக அனீமியா ஏற்படும்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரக புற்றுநோய் எற்பட காரணமாகிறது. இது உங்கள் உடலில் ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு ஆகியவற்றை பாதிக்கிறது.

சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் புகைபிடிப்பது மற்றும் உடல் பருமனும் உள்ளது. உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது, அது இன்சுலின் அளவை உயர்த்துகிறது. மேலும் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது.

சிறுநீரக புற்றுநோயை தடுப்பது எப்படி?

உலகில் 4 சதவீதம் பேருக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படுகிறது. இது 60 முதல் 70 வயது உள்ள ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. சிறப்பாக சிறுநீரக ஆரோக்கியத்தை கடைபித்தாலே சிறுநீரக புற்றுநோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

இதற்கு நோய் எதிர்ப்பை அதிகரிப்பது, அறுவைசிகிச்சை, நோய்க்கான மருத்துகள் கொடுத்து சிகிச்சை அளிப்பது என பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது. 

சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள் சிறுநீர புற்றுநோயுடன் நல்வாழ்வு வாழும் அளவுக்கு சிகிச்சை முறைகளை மேம்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. எனவே சிறுநீரக புற்றுநோய் ஏற்பட்டாலும் சிகிச்சையுடன் உயிர் சேதமின்றி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.