KIA ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் அறிமுகம்!
கியா நிறுவனம் கொச்சியில் புதிய சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் பிரபல காரண நிறுவனங்களில் கியா நிறுவனமும் ஒன்று. இது தென்கொரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். கியா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களை சார்ஜிங் வசதி செய்ய கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் புதிய ஸ்டேஷனை அறிமுகம் செய்துள்ளது.
இது இந்தியாவிலேயே அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்டேஷன் ஆகும். இங்கு 240 kwh டசபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. கியா நிறுவனம் EV6 என்ற எலக்ட்ரிக் காரை கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது.
அதேபோல் வரும் காலங்களில் பல எலக்ட்ரிக் கார்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தப் புதிய சார்ஜிங் ஸ்டேஷனில் கியான் நிறுவன கார்களுக்கு மட்டும் சார்ஜிங் வசதி கொடுக்கப்படவில்லை. அந்த நகரில் இருக்கும் அனைத்து எலக்ட்ரிக் கார்களுக்கும் இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கியா நிறுவனம், " தற்போது எலக்ட்ரிக் கார்களின் தேவையானது மிகவும் அதிகரித்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் எலக்ட்ரிக் கார்களின் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும். இதுபோன்ற பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வரும் காலங்களில் மிகவும் தேவையான ஒன்றாக மாறிவிடும். தற்போது இந்த பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் கியா நிறுவனம் அறிமுகம் செய்த EV6 எலக்ட்ரிக் கார் எக்ஸ் ஷோரூம் விலையானது 60 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டதால் இதன் விற்பனையானது அடுத்த ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.