தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Keys To Lasting Love: Mens Edition: Top 10 Tips To Prevent Breakups

Relationship: பிரேக் அப்பை தடுக்க ஆண்கள் செய்ய வேண்டிய டாப் 10 விஷயங்கள்…!

Kathiravan V HT Tamil
Jan 18, 2024 01:33 PM IST

“Breakups: பரஸ்பர நல்வாழ்வுக்கு முன்கூட்டியே பேசி முடிவுகளை தீர்மானித்துக் கொள்வது அவசியம். இது எதிர்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு முன்கூட்டியேயான தீர்வாக அமையும்”

காதலில் ப்ரேக் அப்பை தவிர்க்க டிப்ஸ்கள் இதோ
காதலில் ப்ரேக் அப்பை தவிர்க்க டிப்ஸ்கள் இதோ

ட்ரெண்டிங் செய்திகள்

முறையான தகவல் தொடர்பு

காதல் மட்டுமல்ல எந்தவிதமான உறவை முறையாக வளர்க்க தகவல் தொடர்பு என்பது மிக முக்கியம்.   எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவது. தங்களின் துணை சொல்லவரும் விஷங்களை முழுமையாக கேட்க முயல்வது உள்ளிட்டவரை அடிக்கடி ஏற்படும் மனக்கசப்புகளை ஏற்படவிடாமல் செய்யும் முதல் காரணியாகும். 

சந்திப்பு

காதலில் சந்திப்புகள்தான் நாள்பட்ட உறவை வலுப்படுத்த காரணாம அமைகிறது.  துக்கத்தையும், மகிழ்ச்சியையும் சேர்ந்து பகிரும்போது உறவுகள் வலுப்படுகிறது. இது போன்ற நேரத்தில் ஆண்கள் முறையான நேரத்தை துணையிடம் செலவு செய்வது அவசியம்.  

புரிதல் 

நெடுநாள் உறவு மேம்பட துணையின் மனநிலையை புரிந்து கொள்ளத்தொடங்குவது, அதற்கேற்றார் போல் பேசுவதும் அவசியம். இது தவறும்போதுதான் பெரும்பாலான பிரேக் அப்களுக்கு காரணமாக அமைகிறது. 

பரிசம்

காதலில் அணைப்புகள், முத்தங்கள் மற்றும் அன்பான சைகைகள் உறவின் புரிதலை அதிகரிக்கும் காரணியாக உள்ளது. 

மோதல்

காதலில் மோதல்கள் தவிர்க்க முடியாதது. காதல் உறவை மேம்படுத்த மேதல்களே மேலும் காரணமாகிறது. எனவே ஆரோக்கியமான மோதல்களுக்கு நேர்மறையான முறையில் தீர்வுகளை கொடுங்கள். 

தீர்வுகளுக்கு முக்கியத்துவம்

பிரச்னைகளின் போது குற்றம் சாட்டுவதை விட தீர்வுகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

நம்பிக்கையை உருவாக்குதல் 

நம்பிக்கையே வலுவான உறவின் அடித்தளம். நடவடிக்கைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் 

உறவுகள் உடைய முக்கிய காரணிகளில் ஒன்றாக வாக்குறுதிகள் உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுங்கள். 

வளர்ச்சிக்கு துணை நில்லுங்கள்

உறவுகள் மேம்பட துணையின் தனிப்பட்ட வளர்ச்சிகளுக்கு துணை நிற்பது முக்கியம். மாற்றத்தைத் தழுவி, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். உறவுக்குள் பரஸ்பர வளர்ச்சிக்காக பாடுபடுங்கள்.

எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள் 

பரஸ்பர நல்வாழ்வுக்கு முன்கூட்டியே பேசி முடிவுகளை தீர்மானித்துக் கொள்வது அவசியம்.  இது எதிர்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு முன்கூட்டியேயான தீர்வாக அமையும். 

WhatsApp channel

டாபிக்ஸ்