கேசரி பாத் : கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேசரி பாத் : கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ரெசிபி!

கேசரி பாத் : கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published May 24, 2025 01:32 PM IST

கேசரி பாத் : இதை தயாரிக்க அரிசி, நெய், குங்குமப்பூ, சர்க்கரை மற்றும் உலர்ந்த பழங்கள் தேவை. இவற்றை பயன்படுத்தி செய்யும்போது, வாசம் உங்கள் மூக்கை துளைக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

கேசரி பாத் : கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ரெசிபி!
கேசரி பாத் : கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ரெசிபி!

தேவையான பொருட்கள்

• பாஸ்மதி அரிசி – ஒரு கப்

• டெசிகேடட் கோகனட் – அரை கப் (உலரவைக்கப்பட்ட தேங்காய், கடைகளில் டெசிகேடட் கோகனட் என்று கேட்டு வாங்கிக்கொள்ளவேண்டும்)

• சர்க்கரை – முக்கால் கப்

• முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

• பாதாம் – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

• ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

• குங்குமப்பூ – 2 சிட்டிகை

• கிராம்பு – 2

• பால் – கால் கப்

• பரங்கிக்காய் விதைக் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் அரிசியை நன்றாக அலசிவிட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதே கடாயில் தேங்காய்த் துருவலை சேர்த்து வறுக்கவேண்டும்.

3. மற்றொரு கடாயில் நெய்யை சேர்த்து அது சூடானவுடன், கிராம்பை சேர்த்து பொரிந்தவுடன், அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவேண்டும்.

4. அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து அது உருகும் வரை கொதிக்கிவிடவேண்டும்.

5. அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சூடான பாலுடன், குங்குமப்பூவைச் சேர்த்து ஊறவிடவேண்டும்.

6. இதையும் அந்த சர்க்கரை பாகில் சேர்த்துக்கொள்ளவேண்டும். வேகவைத்த சாதத்தையும் இந்த பாகில் சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாகக் கலந்துவிட்டு, ஏலக்காய்ப் பொடியை தூவவேண்டும். அடுத்து வறுத்த உலர் பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறிவிடவேண்டும்.

7. இந்த கலவையின் மீது சிறிது நெய் தூவி கடாயை மூடிவைத்து, சில நிமிடங்கள் வேகவிடவேண்டும். நன்றாக வெந்து தண்ணீர் வற்றி பொலபொலவென வரும்போது இறக்கினால் சூப்பர் சுவையான கேசரி பாத் தயார். இதில் மேலும் சிறிது நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

இது சூப்பர் சுவையான இருக்கும். இதை வீடுகளில் நடைபெறும் விழாக்களில் இனிப்பாக பயன்படுத்தலாம். பூஜைகளுக்கு வழிபாடு செய்யவும் இதை பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் இந்த கேசரி பாத், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.